2002-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகசிங்கிடம் சில்லரை
வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி அரசு
ஏதேனும் பரிந்துரை செய்ய இருக்கிறதா? என்று மகாராஷ்டிரா வர்த்தகர்கள் சங்க
கூட்டமைப்பு கடிதம் மூலம் கேட்டிருக்கிறது. அந்தக் கடிதத்துக்குப்
பதிலளித்திருக்கும் மன்மோகன்சிங், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி
முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப் போகிறதா? மத்திய அரசு என்று மாநிலங்களவையில்
கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதி அமைச்சர், சில்லரை வர்த்தகத்தில்
நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் முடிவு ஏதும் அரசிடம் இல்லை
என்று தெரிவித்திருக்கிறார் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். இந்தக்
கடிதத்தை அப்படியே பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுகிறேன் என்று கூறி
மமதா ஸ்கேன் செய்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டிருக்கிறார்.மன்மோகன்சிங்கின் இந்த கடிதம் 2002-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி எழுதப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment