|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2012

கடைசியாக பூனைக்கு மணிகட்டிய தேவராஜன்!


திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் தேவராஜன் என்பவர்.தனது வழக்கு மனுவில், "கொளத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ‘மன்மத அம்பு' படம் பார்க்க சென்று இருந்தேன். அங்கு முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் 85 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் என்னிடம் 150 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலித்தனர். என்னை ஏமாற்றி கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர்.இதுதொடர்பாக கொளத்தூர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் உள்ள முக்கியமான 10 சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தியேட்டர்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதன் மூலம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மூலம் ரூ.34 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள முக்கியமான 17 தியேட்டர்களில் 4 காட்சிகளுக்கு பதிலாக தினசரி 5 காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு இந்த தியேட்டர்கள் சட்ட விரோதமாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் வரை வசூலிக்கின்றன.
இந்த 17 தியேட்டர்களில் மட்டுமே என்னால் ஆதாரங்கள் சேகரிக்க முடிந்தது. சென்னையில் இதுபோல் 120-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதனை கணக்கிட்டால் அரசு நிர்ணயித்த டிக்கெட்டைவிட கூடுதல் கட்டணமாக பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி இதுகுறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...