|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 January, 2013

வாழ்வை விஸ்தரிக்கும் மொழியறிவு!

உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளில், மொத்தம் 6,800 மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றில், 2,261 மொழிகளுக்கு மட்டுமே எழுத்து உண்டு. மீதமுள்ளவை, வாயால் மட்டுமே பேசப்படுபவை.இன்றைய நிலையில், உலகமே ஒரு நாடாக மாறிவருகிறது என்று கூறும் அளவிற்கு, நாடுகளுக்கு இடையேயான பண்பாட்டு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளும், சுற்றுலாக்களும் பெருகி வருகின்றன. அந்தளவிற்கு அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளது. நாடுகளின் எல்லைகளுக்கு, பூகோள அளவில் மட்டுமே முக்கியத்துவம் உள்ளது. 1991ம் ஆண்டு முதல், பொருளாதார தாராளமயத்திற்கு, இந்தியா தனது கதவுகளைத் திறந்துவிட்ட பிறகு, இங்கும் நிலைமை பெருமளவு மாறிவிட்டது. வெளிநாடு செல்வதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்று ஆகிவிட்டது.முன்பெல்லாம், வெளிநாடு என்றால், சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அரேபியா போன்ற வளைகுடா நாடுகளுக்கு செல்வதுதான் பிரபலம். இந்த நாடுகளுக்கும், பெரும்பாலும், உடல் உழைப்பாளர்கள் அல்லது சொந்தமாக ஏதேனும் தொழில் செய்வோர் என்ற அளவிற்குத்தான் மக்களின் போக்குவரத்து இருந்தது. அவைகளைத் தாண்டி வேறு நாடுகளுக்கு செல்வது மிகவும் அபூர்வமாக இருந்தது. ஆனால் இன்றோ நிலைமையே வேறு. கணினி யுகம் தொடங்கியப் பிறகு, மூளை தொடர்பான பணிகளுக்கு, மேற்கத்திய நாடுகளுக்கு செல்வது மிகவும் சர்வசாதாரண விஷயமாக இன்று உள்ளது.

வெளிநாட்டு பயணங்கள் அதிகரித்துவிட்ட நிலையில், வெளிநாட்டு மொழிகளின் முக்கியத்துவமும் பெருமளவு கூடிவிட்டது. ஒரு புதிய வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதானது, ஒரு கூடுதல் பட்டத்தைப் பெறுவதற்கு, சமமாக மதிக்கப்படுகிறது. உங்களின் மொழித்திறன்களே, பல இடங்களில், உங்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தீர்மானிக்கின்றன. முக்கியமாக, டிராவல் ஏஜென்சிகள், விருந்துபசார துறை, மார்க்கெடிங் போன்றவைகளில், வேலைவாய்ப்புகள் மிக அதிகம்.இப்போதைய நிலையில், சீனம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்றவர்களுக்கு, மவுசு அதிகமாக உள்ளது. பல வணிகப் பள்ளிகள், தங்களின் பாடத்திட்டங்களில், வெளிநாட்டு மொழிகள் கற்பதையும் ஒரு அம்சமாக இணைத்துள்ளன. ஜெர்மன் மொழியைப் பொறுத்தவரை, வணிகம் மற்றும் தொழில்துறையில், முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. ஜப்பான் மொழியின் முக்கியத்துவமும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல், தனது பரவலான பயன்பாட்டினால், ரஷ்ய மொழியும் மிகுந்த முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. இவைத்தவிர, அராபிக், இத்தாலியன், போர்ச்சுகீஸ் போன்ற மொழிகளும், அதிக முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. இத்தகைய மொழிகளுள் ஏதேனும் ஒன்றை, சிவில் சர்வீஸ் தேர்வுகளின்போது, ஆப்ஷனல் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.உலகளாவிய அளவில் பணிசெய்ய வேண்டும், உலகையே சுற்ற வேண்டும், உலகளாவிய அனுபவம் பெற வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு இருந்தால், வெளிநாட்டு மொழிகளைப் படிப்பதுதான், உங்களின் லட்சியத்தை அடைவதற்கான எளிதான வழி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...