”பவர் பாசம் காட்டுனா பம்மிப் போவான்! வேஷம் போட்டா வேட்டையாடுவான்!” - பவர்ஸ்டார் பஞ்ச்!
’ஆளே இல்லாத தியேட்டர்ல யாருக்குபா படம் ஓட்டுற’ என்று பலரும் பவர்ஸ்டாரைப் பார்த்து ஒரு காலத்தில் கிண்டலடித்தார்கள். அன்று அனைத்து விமர்சனங்களையும் சிரித்த முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்த பவர்ஸ்டார் இன்று விமர்சித்தவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். எப்படி என்றெல்லாம் தெரியாது ஆனால் பவர்ஸ்டாரும் இப்போது கோடம்பாக்கத்து நட்சத்திரம். கால்ஷீட் கேட்டு அவர் வீட்டு வாசலிலும் சிலர் காத்துக்கிடக்கிறார்கள். இந்த அபரீத வளர்ச்சி பற்றி பவர்ஸ்டாரே மனம் திறந்து பேட்டி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பவர்ஸ்டார் “ அன்பு, பாசம் என்று என்மேல் உயிரையே வைத்திருக்கும் என் கோடிக்கணக்கான ரசிகர்களை விட்டுவிட்டு நான் எங்கே செல்வது.
நான் இந்த இடத்திற்கு வர பல கோடிகளை இழந்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பணம் எவ்வளவு, யார் கொடுத்தார்கள் என்பதெல்லாம் தேவையில்லாதது. லத்திகா படத்தை நான் ஓட்டியது பெருமையான விஷயம். பெரிய தயாரிப்பாளர்களே தியேட்டர் இல்லாமல் கஷ்டப்படும் போது, நான் 250 நாட்கள் ஓட்டினேன். அதற்காக எத்தனை தியேட்டர் முதலாளிகளை காக்கா பிடித்து வைத்திருந்தேன் என்பது எனக்கு தான் தெரியும். என் படங்களை முடக்க எத்தனையோ பேர் திட்டம் போட்டார்கள். ஆனாலும் லத்திகாவை 250 நாட்கள் ஓட்டினேன். ரஜினியோட கோச்சடையானுக்கு போட்டியா ‘தேசிய நெடுஞ்சாலை’ ரிலீஸ் செய்யப்படும். சினிமாவிற்கு நல்லது செய்யாமல் ஓயமாட்டேன். விதைக்குள் அகப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்” என்று பஞ்ச் டையலாக்குகளுடன் பேசி முடித்திருக்கிறார் பவர்ஸ்டார்.
No comments:
Post a Comment