ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
28 March, 2013
கொலையும் செய்வாள் டாக்டர்!
தெற்கு பிரேசிலில் மருத்துவமனை படுக்கைகளை காலி செய்வதற்காக 20 நோயாளிகளை கொன்றுள்ளார் ஒரு பெண் மருத்துவர். தெற்கு பிரேசிலில் இருக்கும் க்யூரிடிபாவில் உள்ளது இவாஞ்சலிகோ மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெர்ஜினியா ஹெலனா டிசோசா (56). அவர், தான் பணியாற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 320 பேரை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை மாற்றுவது, ஆக்சிஜனை குறைப்பது, மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பயன்படும் ஊசியைப் போடுவது என்று பல முறைகளைப் பின்பற்றி கொலைகள் செய்துள்ளார்.
மேலும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களின் விருப்பத்திற்கு எதிராக ஆக்சிஜன் டியூபை பிடுங்கிவிட்டு மூச்சுத் திணறி சாகடிப்பது என்றும் செய்துள்ளார். மருத்துவமனையில் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து கொன்றுள்ளார். அவர்கள் ஓசியில் படுத்திருப்பதை விட அவர்களை கொன்றுவிட்டால் அந்த படுக்கையில் பணம் உள்ளவர்களை அனுமதிக்கலாமே அதற்காகத் தான் இவ்வாறு செய்துள்ளார். படுக்கையை காலி செய்ய ஆளையே காலி செய்த அவர் 20 பேரை கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே மருத்துவமனையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த 300 பேரையும் இவர் தான் கொன்றிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெர்ஜினியாவின் டாக்டர் கணவர் கடந்த 2006ம் ஆண்டி குடல் புற்றுநோயால் இறந்தார். அவர் தான் வெர்ஜினியாவின் முதல் பலி என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வெர்ஜினியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
27 March, 2013
புலிகள் இயக்கத்தை தொடங்குவோம் போராட்டக் குழு எச்சரிக்கை!
தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம்
அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு
தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு
ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு
தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை
முன்னெடுப்பார்கள்" என்றார்.
இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட
நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள்
தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள்,
வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி,
அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.
இரட்டை வேடம் போடும் தி.மு.க!
இலங்கை தமிழர் விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம்
எடுத்துள்ள நிலையில், தி.மு.க., குடும்பத்துக்குச் சொந்தமான ஐதராபாத்
ஐ.பி.எல்., அணி, இரண்டு இலங்கை வீரர்களை கொண்டுள்ளது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறதா
என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இலங்கை தமிழர் விவகாரம் தற்போது
விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை
தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகவைத்து விட்டதாக கூறி, ஆளும்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., வெளியேறியுள்ளது.
இந்நிலையில், நேற்று முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் நடக்கவுள்ள ஐ.பி.எல்.,
போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தடை விதிக்க ஐ.பி.எல்.,
நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து அவசர அவசரமாக கூடிய ஐ.பி.எல்., நிர்வாக குழு, சென்னையில்
நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட தடை விதித்தது. இதைத்
தொடர்ந்து இன்று சட்டசபையில் உரையாற்றிய முதல்வர், தி.மு.க.,
குடும்பத்திற்குச் சொந்தமான ஐ.பி.எல்., அணியில், இலங்கை வீரர்களை
அனுமதித்து தி.மு.க., இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார்.
தி.மு.க.,வின் இந்த செயல் சுயநலத்தின் உச்சகட்டம் எனவும் அவர்
தெரிவித்தார். சமீபத்தில் ஐதராபாத் ஐ.பி.எல்., அணியை தி.மு.க.,
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கினர். சங்ககரா மற்றும் பெரேரா என்ற
இரண்டு இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த அணியில் சங்ககரா கேப்டனாக
உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 March, 2013
எங்கள் மக்களைக் கொல்வதற்கு எங்கள் வரிப்பணம் !
சிங்கள பௌத்த இனவெறி அரசு, ஈழத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததை ஐ.நா. செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சேனல்-4 உள்ளிட்ட அனைத்துலக முன்னணி ஊடகங்கள் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் உலகம் முழுவதிலும் பேசப்பட்டாலும், 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டை ஆளும் இந்திய அரசு, ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழ்ப் பொதுமக்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்ட கொடுமையை இனப்படுகொலை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை தமிழீழப் படுகொலையை “இனப்படுகொலை” என்று தீர்மனம் இயற்ற முடியாது என காங்கிரசு ஆட்சி மட்டுமல்ல, நடுவண் அரசில் இல்லாத பா.ச.க., சமாஜ்வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சி, ஐக்கிய சனதா தளம், திரிணமுல் காங்கிரசு, சி.பி. எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.
இந்தியத் தேசியக் கட்டமைப்பில், தமிழ் இனத்திற்கு எதிராக செயல்புரிவதில் இடது சாரி, வலதுசாரி என்று வேறுபாடில்லை. பார்ப்பன - இந்துத்துவாக் கட்சி, பிற்படுத்தப்பட்டோர் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி என்ற மாறுபாடில்லை. இந்திய தேசிய அரசியல் தலைமை அனைத்தும் தமிழினப் புறக்கணிப்பில் ஒரே சிந்தனை கொண்டுள்ளன. 2008-2009 இல் இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில் இந்திய அரசும் பங்கு கொண்டது போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்ற பெயரில் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வலுவற்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழி ந்தது. மன்மோகன் - சோனியா ஆட்சி அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களைச் செய்து இராசபட்சே கும்பல் மீது துரும்பும் படாமல் பாதுகாத்துள்ளது.
அரபிக் கடலில் இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, இத்தாலியுடன் தூதரக உறவையே முறித்துக் கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளது இந்தியா. ஆனால், நாதியற்ற 600 தமிழ் மீனவர்களைச் சிங்களப்படை சுட்டுக் கொன்றதற்கு ஒரு கைது கிடையாது. ஒரு வழக்கு கிடையாது.இத்தனைக்குப் பிறகும் இந்தியாவுக்கு நாம் ஏன் வரிகொடுக்க வேண்டும்? நம் பணத்தைக் கொண்டு நம் இனத்தை அழிக்க ஆயுதம் வாங்கவா? என்ற கேள்வி தமிழர்கள் மனதில் பூதாகரமாக இந்நிலையில் எழுந்துள்ளது.
முதல் சாதனை பெண்கள்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் மலையேறி தற்போது, பெண்கள் இடம்பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.
சில முக்கியத் துறைகளில் முதல் இடம் பிடித்த பெண்களின் பட்டியல் இது...
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட்
மௌன்ட் எவரெஸ்ட்டில் முதல் முறையாக ஏறிய பெண் - பச்சேந்திரி பால்
மௌன்ட் எவரெஸ்ட்டில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்த பெண் - சந்தோஷ் யாதவ்
இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி. முத்தம்மா
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
முதன் முதலாக ஞானபீட விருது பெற்றவர் - ஆஷ்பூர்ணா தேவி
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி
முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா
ஆங்கிலக் கால்வாயை முதன் முதலாக நீந்தி கடந்த பெண் - ஆர்த்தி சாஹா
இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்
இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி
இந்தியாவில் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல் - பி. பண்டோபாத்யாயா
இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம். பாதிமா பீவி
உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)
முதல் பெண் நீதிபதி - அண்ணா சாண்டி
முதல் பெண் வழக்குரைஞர் - கார்நெலியா சொராப்ஜி
முதல் பெண் முதலமைச்சர் - சுசீதா கிரிபாலனி
ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்ற இந்திய பெண் - கமலிஜித் சாந்து
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000)
முதல் பெண் விமானி - சுசாமா
முதல் பெண் தபால் நிலைய தலைமை அதிகாரி - கன்வால் வர்மா
கிரிக்கெட் விளையாட்டில் முதல் பெண் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்
ஆங்கிலப் படையுடன் போரிட்டு வென்ற பெண் - ராணி வேலு நாச்சியார்
புக்கர் விருது பெற்ற இந்தியப் பெண் - அருந்ததி ராய்
இராணுவத்தில் பதக்கம் பெற்ற முதல் பெண் - பீம்லா தேவி
உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் - ரெய்தா பரியா
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
இதுபோன்று முக்கியத் துறைகளில் இடம்பிடித்த முதல் பெண்கள் என்ற பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும். அவ்வளவையும் தொகுக்க முடியாமல் இங்கு ஒரு சில முக்கியத் துறைகளை மட்டும்..
தமிழர்களுக்கு கொடுமை.. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் ராணி எலிசபெத்!
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டதாக லண்டனில் உள்ள காமன்வெல்த் அமைப்பின் செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கி கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என திமுக, அதிமுகவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து ராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு முக்கியமான பின்னடைவாக அமையும். இந் நிலையில் இந்த மாநாட்டையே மொரீசியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இவ்ளோ தான் இழப்பு?
தமிழக சட்டசபையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 மாத காலத்துக்கு 'எம்.எல்.ஏ' என்ற தகுதியை இழக்கின்றனர். இதனால் அவர்கள் இழக்கும் சலுகைகள் என்ன தெரியுமா?
சம்பளம் ரூ50 ஆயிரம்,
தமிழக எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் - ரூ.8,000,
ஈட்டுப்படி - ரூ.7,000,
டெலிபோன் படி - ரூ.5,000,
தொகுப்பு படி - ரூ.2,500,
தொகுதி படி - ரூ.5,000,
தபால் படி - ரூ.2,500,
வாகனப்படி - ரூ.20,000 என மொத்தம் ரூ50 ஆயிரம்.
பயண சலுகைகள் எம்.எல்.ஏ. விடுதி வாடகை ரூ.250, பயணப்படி -
ரெயிலில் ஏ.சி. இரண்டு அடுக்கு பெட்டிக்கான கட்டணம், தினப்படி - ரூ.500, தமிழகம் முழுவதும் இலவச பஸ் பாஸ். துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்,
வீட்டில் ஒரு டெலிபோன். எம்.எல்.ஏ. விடுதியில் ஒரு டெலிபோன், எம்.எல்.ஏ. குடியிருப்பில் மாதம் ரூ.250 வாடகையில் ஒரு வீடு. (அல்லது) விடுதி வாடகை ஒரு நாளைக்கு 2 ரூபாய் 50 பைசா மட்டும்.
சிகிச்சை சலுகைகள், இதுமட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை,
வெளிச்சந்தையில் வாங்கும் மருந்துகளுக்கான தொகையை திரும்ப பெறலாம்,
பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு சில நிபந்தனைகளுடன் நிதி உதவி.,
அனைத்து புத்தகங்களுடன் கூடிய பிரமாண்டமான சட்டசபை நூலகத்தை பயன்படுத்தலாம்,
ஒரு உதவியாளர் உண்டு,
நோட்டு, பேனா, பென்சில், கவர் உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசம், எம்.எல்.ஏ. விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக பிரத்யேக ரயில் டிக்கெட் கணினி முன்பதிவு மையம்,
ரயில் நிலையத்தில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 தவணையாக ரூ.20,000,
நிவாரண உதவிகள் இறந்தால் ரூ.2 லட்சம், எம்.எல்.ஏ.வுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் வசதி, இறந்த எம்.எல்.ஏ. குடும்பத்திற்கு குடும்பப்படி மாதம் ரூ.1,000, சட்டப்பூர்வ வாரிசுக்கு மொத்த தொகையாக ரூ.2 லட்சம் தரப்படும். இறந்த எம்.எல்.ஏ.வின் சட்டப்பூர்வ வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.5,000 கிடைக்கும் ஆனால் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இத்தனை சலுகைகளும் ஆறு மாதம் கிடைக்க வழியில்லையாம்!!
சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!
தமிழ் நாட்டில் கடையைபோட்டு சிங்களவனுக்கு வியாபாரம்! இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனம் சிங்களத்தில் நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த கடைகளில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களின் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது. தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம்.
25 March, 2013
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.
எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.
அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம். இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.
அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க. இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ். அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர். அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
அதுவரை நாம் ஒயபோவதில்லை!
தெருவில் செல்கையில்
ஒருவன் இடித்துச் சென்றாலே
கோபம் வரும்
இவனென் சகோதரிகளை
துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான்,
கையை உடைக்க வேண்டாமா
காரி உமிழ வேண்டாமா
கொன்று புதைக்க வேண்டாமா
என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கொன்ற
என் சகோதரியை
நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை
பலி தீர்க்கும் வரை ..
அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் வரை - இங்கே
நாம் ஒயபோவதில்லைஎன்று
உலகிற்கு உணர்த்துவோம்
ஈழதமிழன் சிந்திய
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
ஈன சிங்கள இனம்
பதில் சொல்லும் காலம் வரும்.
பலி வாங்கியே தீருவோம் ..!
அதுவரை நாம் ஒயபோவதில்லை ..!
ஒருவன் இடித்துச் சென்றாலே
கோபம் வரும்
இவனென் சகோதரிகளை
துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான்,
கையை உடைக்க வேண்டாமா
காரி உமிழ வேண்டாமா
கொன்று புதைக்க வேண்டாமா
என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கொன்ற
என் சகோதரியை
நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை
பலி தீர்க்கும் வரை ..
அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் வரை - இங்கே
நாம் ஒயபோவதில்லைஎன்று
உலகிற்கு உணர்த்துவோம்
ஈழதமிழன் சிந்திய
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும்
ஈன சிங்கள இனம்
பதில் சொல்லும் காலம் வரும்.
பலி வாங்கியே தீருவோம் ..!
அதுவரை நாம் ஒயபோவதில்லை ..!
போராடினால்தான் வெற்றி!
''திட்டத்துக்காக மக்கள் அல்ல,
மக்களுக்காகவே திட்டம்"
விவசாய நிலங்களில்தான் எரிவாயு குழாய்களைப் பதிப்போம் என்று அடம்பிடித்த வந்த கெயில் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்தபோதும், தமிழக அரசு அதிகாரிகளின் ஆதரவோடு அதிரடியாக
நிலங்களை கையகப்படுத்தி குழாய்களைப் பதித்தது கெயில் நிறுவனம். தலைமைச்
செயலாளர் அளவில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்கிற உத்தரவும்
காற்றில் பறக்கவிடப்பட்ட்து.
இதையடுத்து போராட்டத்தில் குதித்த
விவசாயிகளை தமிழக போலீஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி ஒடுக்கப்
பார்த்தனர். ஆனால், உறுதி கலையாத விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதன் பிறகே இந்த விஷயத்தில் கவனத்தைத் திருப்பிய முதலமைச்சர் ஜெயலிலதா...
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டார்.
மூன்று நாட்கள் தொடர்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு
வாதங்களையும் கேட்டறிந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று (மார்ச்-25) சட்டசபையில்
தன் முடிவை அறிவித்துள்ளார்.
1. கெயில் நிறுவனம் விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை
பதிக்கும் தற்போதைய திட்டத்தினை உடனடியாக கைவிடவேண்டும்.
2. வேளாண் நிலங்கள்
பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு கெயில்
நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
3. கெயில் நிறுவனம் ஏற்கெனவே நிலங்களில் குழாய்களைப் பதிக்க தோண்டியுள்ள
குழிகளை உடனடியாக சமன்படுத்தி அந்நிலங்களை அதன் முந்தைய நிலையில்
விவசாயிகளிடமும் நில உரிமையாளர்களிடமும், ஒப்படைக்க வேண்டும்.
4. விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடரும் வகையில் ஏற்கெனவே
பதிக்கப்பட்ட குழாய்களை கெயில் நிறுவனம் உடனடியாக அப்புறப்படுத்த
வேண்டும்.
5. இந்தத் திட்டத்தினால் பழவகை மரங்களையும் மற்றும் பிற கட்டுமானங்களையும்
இழந்து, தற்போது வரை இழப்பீடு அளிக்கப்படாத விவசாயிகளுக்கும், நில
உரிமையாளர்களுக்கும் உடனடியாக கெயில் நிறுவனம் உரிய இழப்பீட்டினை
வழங்க வேண்டும். 'கெயில்' திட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து
வழக்குகளையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
''விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வு
கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திட்டத்துக்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் என்பதில் எனது
தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதையும், மக்களின் வாழ்வாதாரங்களை
பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு என்றைக்கும்
உடந்தையாக இருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா!
விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்திருக்கும்
முதல்வர் ஜெயலலிதாவை, 'எதிர்காலத்திலும் இதே நிலையைத் தொடர்வார்' என்கிற
நம்பிக்கையோடு பாராட்டுவோம்!
போராடினால்தான் வெற்றி என்பதை
மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது... இந்த விஷயம். எனவே, பாதிப்பு
வரும்போது போராட என்றுமே விவசாயிகளும் தயங்கக் கூடாது... தொடரட்டும்
நியாயமான போராட்டங்கள்!
"34 வயது 'குழந்தை'.சஞ்சய் தத்துக்கு ஆதரவு தரும் பொறிக்கிகள்!
நம் இனம் அழியும் போது ஆதரவு இல்லை கொத்து கொத்தாய் மடியும் பொழுது கேள்வி கேட்பார் இல்லை! இந்திய நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என கூறிவிட்டு இன்று A K 47 வைத்து இருந்தவன் குற்றவாளி இல்லையாம் குழந்தையாம்? கேடு கெட்ட நாய்களே? பேட்டரி வாங்கி கொடுத்தவனை தூக்கிலிட காத்திருக்கும் அரசாங்கம் வீட்டில் ஆயுதம் வைத்திருந்தவன் ஒன்றும் அறியாத குழந்தையாம்! இந்த நாய்கள் கூறுகின்றன.
1993-ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சயத் தத்துக்கு மன்னிப்பு
கொடுத்து விடுதலை செய்யலாம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்
கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த், ஜெயா பச்சன் என
பலரும் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்
என்று கருத்து தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கும் அதிரடியாக சஞ்சய்
தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,
சஞ்சய் தத் ஒரு குற்றவாளி அல்ல. அவர் ஒரு தீவிரவாதியும் அல்ல.1993-ம் ஆண்டு
ஒரு மோசமான நிலைமை இருந்தது. அப்போது அவருக்கு இளம் வயது. குழந்தைகள்
எப்படி சில நேரங்களில் செயல்படுவார்களோ அது போல் அவர் செயல்பட்டிருக்கிறார்
(சஞ்சய் தத் கைது செய்யப்பட்ட போது அவருக்கு 34 வயது என்பது
குறிப்பிடத்தக்கது). அவர் ஒரு தவறு செய்துவிட்டார். அதற்கான விலையாக 18 மாத
சிறைத் தண்டனையும் அனுபவித்துவிட்டார். கடந்த காலங்களில் மதவாதத்துக்கு
எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்ததாலேயே
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கின்றனர் சிலர்
என்றார் அவர்.
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில்,
சஞ்சய் தத் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதை ஜனாதிபதி பரிசீலனை
செய்யலாம்.. இது பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.
டிவி சேனல்களுக்கு ஆப்பு டிராய்!
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள்
எதுவாக இருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரங்களை
ஒளிபரப்ப வேண்டும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
உத்தரவிட்டுள்ளது.
டிவிக்களில் சினிமாவோ, சீரியலோ பார்க்க அமர்ந்தால் போதும் விளம்பரங்களின்
தொல்லை தாங்க முடியாது. 7முதல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரத்தை
போட்டு தாளித்து விடுவார்கள். விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் காசு
பார்க்கும் தனியார் சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது டிராய் இந்த அறிவிப்புக்கு தனியார்
சேனல்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
பல ஆயிரம் கோடி வருமானம்
இந்தியாவில் மொத்தம், 163 கட்டண சேனல்கள் இயங்கி வருகின்றன. இது தவிர இலவச
சேனல்களும் இந்தியாவில் நூற்றுக்கணக்கில் பெருகியுள்ளன.
கட்டண சேனல்கள், விளம்பரங்கள் மூலமாக, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்
வருமானம் ஈட்டுகின்றன. இதுதவிர, சந்தா மூலமாகவும், 21 ஆயிரத்து 300 கோடி
ரூபாய் வருமானம் பெறுகின்றன. ஆனால், ஒளிபரப்பு விஷயத்தில் உள்ள ஓட்டைகளைப்
பயன்படுத்தி, சந்தா வருமானத்தை விட, விளம்பரங்கள் மூலமாகவே அதிக
வருமானங்களை, கட்டண சேனல்கள் ஈட்ட முயற்சிக்கின்றன.
கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு
எனவே விளம்பர விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஒரு கருத்துருவை,
டிராய் உருவாக்கியுள்ளது. இதன்படி, கட்டண சேனல்களில் விளம்பரங்களை
ஒளிபரப்புவதில் சில கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த
கட்டண சேனல்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது, ஒரு மணி நேரத்தில் 12
நிமிடங்கள் விளம்பரங்கள் ஒளிபரப்ப வேண்டும் என டிராய் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளது. விளம்பரங்கள் ஒளிபரப்பும் நிமிடம் குறைவதால் சந்தாதாரர்கள்
எவ்வித தடையுமின்றி, நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும்.
விளம்பர இடைவெளியிலும் கட்டுப்பாடு
விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல்,
நிகழ்ச்சிகளின் போது விளம்பரம் ஒளிபரப்புவதற்காக விடப்படும் இடைவெளி
குறித்த விஷயத்திலும் கட்டுப்பாடு கொண்டுவரவும், டிராய் திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் 7 நிமிடத்திற்கு ஒரு பிரேக் என்ற வகையில்
விளம்பர இடைவெளி விடப்படுகிறது என்பதுதான் பார்வையாளர்களின் புகார்.
கட்டண சேனல்கள் எதிர்ப்பு
டிராயின் இந்த திட்டத்துக்கு, கட்டண "டிவி' சேனல்கள் தரப்பில் கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சோனி பொழுதுபோக்கு சேனல் குழுமத்தின் தலைவர்
ரோஹித் குப்தா கூறியதாவது: "டிவி' சேனல்கள், தங்களின் வருமானத்துக்கு
பெரும்பாலும், விளம்பரங்களைத் தான் நம்பியுள்ளன. இதை எப்படி குறைக்க
முடியும் என்று கேட்டுள்ளார் குப்தா.
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல?
கழுவிலேற்றப்பட வேண்டியது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள
சிலரும் தான் என தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன்
தெரிவித்துள்ளார்.
மணப்பாறை நகரில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழீழம் கோரி உண்ணாவிரதம்
இருந்தனர். மாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரின் வீதிகள்
வழியாக தமிழீழம் ஒன்றே தீர்வு என்று முழக்கமிட்டு நகர்வலம் வந்தனர்.
அவர்கள் மத்தியில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் பேசியதாவது,
ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அனைத்துலக நீதிமன்றத்தின் முன்பாக அவன்
நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு செய்த படுகொலைகளுக்கும் பாதகங்களுக்கும்
தண்டனையாக அவனைத் தூக்கிலிட வேண்டும். ஆனால் ஈழத்தில் நடந்த மாந்தப்
படுகொலைகளுக்கு அவன் மட்டுமா காரணம்? இலங்கைப் படைகள் மட்டும் தனித்து
நின்று விடுதலைப் புலிகளோடு மோதியிருக்குமானால் தலைவர் பிரபாகரன் தலைமையில்
என்றைக்கோ தமிழீழம் அமைந்திருக்கும்.
ஆனால், இனவெறி பிடித்த நாடுகள் உடனிருந்து ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தின.
அவைகள் இன்று இலங்கை என்ற முகமூடிக்குள் ஒளிந்து கிடக்கின்றன. இலங்கைக்கு
ஆயுதங்களும், இராசயண ஆயுதங்களும், கொத்துக் குண்டுகளும், தடைசெய்யப்பட்ட
ஆயுதங்களையும் வழங்கியது இந்தியா இல்லையா? இலங்கைக்கு ஆதரவாக படைகளை
அனுப்பியது டெல்லி ஆட்சியாளர்கள் இல்லையா? உளவு சொன்னது இவர்கள் இல்லையா?
போருக்குப் பணம் கொடுத்தது இவர்கள் இல்லையா? அங்கு அப்பட்டமான மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டது இவர்கள் இல்லையா? உப்பைத் தின்றவன் தண்ணீர்
குடித்துத் தானே தீர வேண்டும்!
இந்திய இலங்கை கூட்டோடு சீனாவும், பாக்கிஸ்தானும் கூடிச் சேர்ந்து கோரத்
தாண்டவம் ஆடவில்லையா? இவர்களுக்கு எல்லாம் மேலாக தமிழினத்தின் காவலனாக
வேலேந்தி நிற்க வேண்டிய கடமையிலிருந்த தமிழக அரசு என்ன செய்தது?
மேனனும், நாராயணனும் கொழும்புக்கு ஓரோடிச் சென்று ஆதரவு அளித்தபோது
சென்னைக் கோபாலபுரத்தின் கதவுகளைத் தட்டி ஆலோசனையும் ஆதரவும் பெற்ற பின்னர்
தானே சென்றார்கள்.
9 ஆண்டு காலம் அவர்களோடு கூடிக்குலவி ஆட்சி சுகம் கண்ட கருணாநிதி இன்று
பதவியைத் தூக்கி எறிவதால் மட்டும் குற்றாவாளிக் கூண்டில் இருந்து
இறக்கிவிடலாமா? இப்படி இவர்களையெல்லாம் தப்பிக்கவிட்டு இராஜபக்சேவை மட்டும்
தூக்கிலிட்டால் தமிழீழ மண்ணில் உயிரை விதையாக்கிய ஆயிரமாயிரம் பச்சைக்
குழந்தைகளின் உயிர்கள் அதை மன்னிக்குமா?
உயிர் கொடுத்த போராளிகளும், உயிர் நீத்த அப்பாவி மக்களும், ஏற்றுக்
கொள்வார்களா? எனவே ஒரு கயவனை மட்டுமல்ல பல கயவர்களின் கணக்குகளை சரி
பார்க்கும் நேரமிது என்றார்.
தேவை மனிதநேயம்!
கூவம் ஆற்றில் கால் தவறி விழுந்து உயிருக்கு போராடிய முதியவரை
போக்குவரத்து போலீஸ் ரவி காப்பாற்றியுள்ளார்.
சென்னை அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). அவர்
அதிகாலை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில்
புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது,
கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
இதனால் பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது
கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும்
மூழ்கிய படி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி
இருந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென
கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல
முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியவரை
பிடித்துக் கொள்ளச் சொன்னார்.
ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை
பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை
பிடித்து முதியவரை இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி.
முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம்
கொட்டியது.
இதையடுத்து அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய
பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி
வைத்தார். முதியவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு
இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை
காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு
தெரிவித்தனர். முதியவரை காப்பாற்றிய ரவிக்கு சல்யூட்.
24 March, 2013
23 March, 2013
இப்போதாவது சிந்தியுங்கள்!
தமிழனுக்கு உடல்,பொருள் ஆவியெல்லாம் தருவேன்னு சொல்லிட்டு
அதுக்குப்பதிலா தங்கக்காசா கேட்டவரைப்போய் தமிழருக்காக ஏன்
பேசலைன்னு கேட்குறீங்களே சார்????
சமத்துவம் இருக்குற நாடு தேடிப்போறேன்னு சொன்னவருக்கு
கோடிகோடியா கொட்டிக்குடுத்து ஃப்ளை டிக்கெட் காசு குடுத்தவங்க சார்
நாம??
புரட்சித்தமிழன், வெள்ளைத்தமிழன், பச்சை மஞ்சள் கருப்புன்னு
எல்லா கலர்லையும் "நிறம் மாறும்" பச்சோந்தித்தமிழர்களை ஏன் சார்
போராட வரலைன்னு கேட்குறீங்க???
அதை விடுங்க சார்.... மாணவன்
போராடுறதை கூட செய்தியாக்காத அந்த மானங்கெட்ட ஊடகம்,
நடிகன்றதுக்காக அவன் பேட்டிகளையும், சல்லாபங்களையும்
உயர்வாப்பேசுதே?? அதைக்கேளுங்க சார் மொதல்ல....
### இதுதான் சரியான தருணம்... யார் யார் தமிழர் இல்லை என்று
சரியாய் உணர்ந்து கொள்ள... இப்போதாவது சிந்தியுங்கள்.
இன்று உலக வானிலை தினம்!
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. "வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்' என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. உலக வானிலை அமைப்பு, 1950ல் துவக்கப்பட்டது. காலநிலை , வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகளை மேற்கொள்வதில், ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பாக, 1951 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில், இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சுகாதாரம், உணவு, விவசாயம், பாதுகாப்பான தண்ணீர், வறுமை ஒழிப்பு, இயற்கை பேரழிவுகளை தவிர்த்தல் போன்ற பணிகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.
வானிலை மாறுபடுவதால்...: தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட, வளர்ந்த நாடுகளுக்கு தான், அதிக பங்கு இருக்கிறது.
காத்திருக்கும் அபாயம்: வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.
22 March, 2013
உலக சாதனை மாணவன்..
சாதிப்பதற்கு உடலின் ஊனம் தடையில்லை என மன தெம்புடன் தன்னை நிரூபித்து முன்மாதிரியாக திகழ்கிறார் ஒரு ஏழை மாணவர். சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் - சரோஜா தம்பதியினரின் மகன் மாரியப்பன் (18). மாற்றுத்திறனாளி. அப்பா தங்கவேல் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். தாயார் சரோஜா, செங்கல் சூளை வேலைக்குச் சென்று மாரியப்பன், அவரது இரு தம்பிகள், அக்கா ஆகியோரை காப்பாற்றி வருகிறார்.
மாரியப்பன், பெரிய வடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 கணினிஅறிவியல் பிரிவு எடுத்து பயின்று வருகிறார். வலது கால் பாதிக்கப்பட்ட இவர், 6-ம் வகுப்பு முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கினார். வறுமை வயிற்றுக்கு பிரச்சனை தரலாம் தனது கால்களுக்கு இல்லை என ஆர்வமாக விளையாட தொடங்கியவர் மாரியப்பன். சிறப்பு விசயம் என்னவென்றால் மாவட்ட அளவில் பொதுப்பிரிவு(கால்கள் நன்றாக உள்ளவர்கள் உட்பட்ட) மாணவர்களுக்கான போட்டியில் பங்கேற்று 4 முறை முதல் பரிசை வென்றுள்ளார். இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டியின் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாரியப்பன், 1.72 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.
இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு மாரியப்பனுக்கு கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக வெளிநாடு செல்வதற்கு பாஸ்ப்போர்ட் எடுக்கக் கூட பணம் இல்லாததால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜ் என்ற மாற்றுத்திறனாளி மாணவர் லண்டன் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அந்த லண்டன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.74 மீட்டர் தாண்டியவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய பாரலிம்பிக் கமிட்டி நடத்திய தேசிய அளவிலான பாரலிம்பிக் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாரியப்பன் மீண்டும் கலந்து கொண்டார். இப்போட்டியில், 1.75 மீட்டர் உயரம் தாண்டி முதல் பரிசை வென்றார்.இது இந்த பிரிவில் உலக சாதனை. சாதிக்க வறுமையும்,ஊனமும் தடையில்லை என போராடி நிருபித்துள்ளார்.
சர்வதேச சிம் கார்டு அறிமுகம்!
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் பயணிகளுக்கு உதவும் வகையில் சர்வதேச சிம் கார்டு மும்பையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹாட்மெயில் இ-மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியாவின் கூட்டு முயற்சி இந்த ஜாக்ஸ்டர் சிம் கார்டு. இது குறித்து அவர் கூறியது: ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி இருபது லட்சம் பேர் இந்தியா வந்து செல்கின்றனர். இதில் 86 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். சர்வதேச ரோமிங் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், ஜாக்ஸ்டர் சிம் கார்டு இந்த வகை பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ. 600. தற்போது சந்தையில் விற்பனையாகும் சர்வதேச சிம் கார்டுகளை நோக்கும்போது இது 70 சதவீதம் விலை குறைந்தது. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய இடங்களில் இதனை உள்ளூர் எண் கொண்டு உள்ளூர் அழைப்புகளுக்கும் சர்வதேச அழைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். உலகின் பிற நாடுகளில் மேலும் குறைந்த அழைப்புக் கட்டணத்துக்கு இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம்
இலவச தரிசனத்தில் மாற்றம்!
திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள் நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும். கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வைகுண்டம்: திருமலையில், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன. இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய, ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொட்டை: என்ன தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கைரேகை: திருமலையில், வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள் வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில் சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம் வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல், கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
இன்று சர்வதேச தண்ணீர் தினம்!
உலகம் இயங்குவதற்கு, தண்ணீர் என்ற சக்கரம் அவசியமானது. இது ஐம்பூதங்களில் ஒன்று. இயற்கையுடன் தொடர்புடையது. நேரடியாகவும், மறைமுகமாகவும் அன்றாட வாழ்வின் பெரும்பாலான பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும்ற மார்ச் 22ம் தேதி, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அவசியம்.
வறட்சி ஏன்: பெருகும் மக்கள் தொகை, காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம், பூமி சூடாவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்துக்கு காரணம். சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. அப்படி இருக்கும் போது, உலகின் தண்ணீர் தேவையை எப்படி ஈடு கட்ட முடியும். இதையும் செயற்கையாக தயாரிக்கலாம் என்றால், செலவு பன்மடங்கு அதிகம். எனவே, இயற்கையாக கிடைக்கும் நீருக்கு போட்டி ஏற்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்: தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். ஏனெனில், இந்தியாவில் மூன்றில் ஒரு தெருக்குழாய் பழுதடைந்ததாகவே உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது. சிலரே பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை குறைத்துக் கொள்ளலாம். அவசியமில்லாத பணிகளுக்கு, தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தலாம். உணவுப் பொருள் வீணாவதை தடுக்க வேண்டும். மழை நீரை ஏரிகளில் சேமித்து வைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மரம் வளர்ப்பது, மழைப்பொழிவை அதிகரிக்கும் என்பதால், அதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதிர்ச்சியளிக்கும் ஆய்வு: தண்ணீர் தொடர்பான ஐ.நா., ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்.
* உலகில் 85 சதவீத மக்கள் வறட்சியான பகுதியில் வாழ்கின்றனர். 78 கோடி பேருக்கு குடி தண்ணீர் வசதி இல்லை. 250 கோடி பேருக்கு, அடிப்படை தேவைகளுக்கான தண்ணீர், போதுமானதாக இல்லை. ஆண்டுதோறும் 60 - 80 லட்சம் பேர், தண்ணீர் தொடர்பான நோயினால் இறக்கின்றனர்.
* தற்போதிருக்கும் தண்ணீர் தேவைக்கான அளவு, 2050ம் ஆண்டுக்குள், 19 சதவீதம் அதிகரிக்கும்.
* உலகிலுள்ள ஆறுகளில் 276 ஆறுகள் (ஆப்ரிக்காவில் 64, ஆசியா 60, ஐரோப்பியா 68, வட அமெரிக்கா 46, தென் அமெரிக்கா 38), ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பாலும் செல்கிறது. இதில் 185 ஆறுகளை இரண்டு நாடுகளும், 20 ஆறுகளை 5 நாடுகளும் பங்கிடுகின்றன. அதிகபட்சமாக மத்திய ஐரோப்பாவில் "தன்யூப்' என்ற ஆறு, 18 நாடுகளால் பங்கிடப்படுகிறது. உலகில் 46 சதவீத நிலப்பரப்பு, எல்லை கடந்த ஆறுகளால் சூழப்பட்டுள்ளது.
* அரேபிய நாடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. கடல்நீரைத் தான் சுத்திகரித்து பயன்படுத்துகின்றனர். அரேபிய நாடுகளில் 66 சதவீதம், வேறு நாடுகளில் இருந்து தண்ணீரை பெறுகின்றன.
* வளர்ந்த நாடுகள், அதிகளவில் தண்ணீரை மறுசுழற்சி செய்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் பயன்படுத்திய தண்ணீர், 90 சதவீதம் அப்படியே வீணாக ஏரி, கடலில் கலக்கிறது. இதனாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
ஈழம் கோரி வைகோவின் தாயார் உண்ணாவிரதம்.
தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டத்தினை மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் அ.பழனிச்சாமி தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் வை.ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். கலிங்கப்பட்டியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சிறுவன் பாலச்சந்திரனின் உருவம் வரையப்பட்ட பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் குறித்து நம்மிடையே பேசிய தாயார் மாரியம்மாள், 1990 ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள எங்களின் வீட்டில்தான் 37 விடுதலை புலிகளுக்கு உணவளித்து பாதுகாத்து வந்தோம். அப்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தோடு உணவளித்து உபசரித்தோம். அந்த பாசம் காரணமாகவே இப்போது உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)