உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய
முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது.
இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர்
எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்நிலையில், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார அமைப்பால் ஏப்.,7ம் தேதி, உலக சுகாதார
தினம் கடைபிடிக்கப்படுகிறது.."அதிக ரத்த அழுத்தம்' என்பது
இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது
மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது.
ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய
செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் மூன்று இளைஞர்களில்
ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில்
நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது
கட்டுப்படுத்தக்கூடியது.
உப்பு
பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது,
ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல்,
தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம். ஜப்பானில்
தொழில் வளர்ச்சியை போல, சுகாதார வசதியும் சிறப்பாக உள்ளது. இதற்கு,
உலகிலேயே மக்களின் வாழ்நாள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் என்பதே சாட்சி.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சுகாதார வசதி குறைவு. என்னதான் அரசு
சுகாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது அனைவரையும் சென்று
சேர்வதில்லை. நகரங்களில், போதிய சுகாதார வசதிகள் உள்ளன. கிராமங்களின் நிலை
பரிதாபம்.குழந்தை பிரசவம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், அவசர
சிகிச்சை போன்ற பிரச்னைகளுக்கு சுகாதார மையங்கள் தவிர்க்க முடியாதவை. 10
கி.மீ., தூரத்துக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அரசு உறுதி செய்ய
வேண்டும். சுற்றுச்சூழல், நீர், காற்று போன்றவற்றை, சுத்தமாக வைத்திருக்க
வேண்டும்.முயற்சி செய்யலாம்
No comments:
Post a Comment