மங்களூரில் உள்ள ஒரு கோயில் கருவறைக்குள் தினமும் 2 விதவை பெண்கள் பூஜைகள் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் கடந்த 5 ஆம் தேதியில் இருந்து தசரா பண்டிகை கோலாகலமாக
கொண்டாடப்பட்டு வருகிறது. மங்களூர் புத்ரோலியில் உள்ள புகழ் பெற்ற
கோகர்னாதா கோவிலிலும் தசரா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தினமும் 2 விதவை பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று
அங்குள்ள மூலவரான சிவ பெருமானுக்கு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பூ,
தீர்த்தம், பிரசாதம் கொடுத்து வருகிறார்கள். இது கர்நாடகா முழுவதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கலாச்சாரத்தின்படி கணவனை இழந்த விதவை பெண்கள்
சுப காரியங்களில் ஈடுபடுவது மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில்
கோவிலுக்குள் தினமும் 2 விதவை பெண்கள் சென்று பூஜைகள் செய்து வருவது பெரும்
பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ஜனார்தன புஜாரி கூறுகையில், ''பெண்கள்
தெய்வத்துக்கு நிகராணவர்கள், அவர்கள் மீதுள்ள மரியாதை நிமித்தம் தான் இந்த
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.விதவை பெண்கள் மீதான மூட நம்பிக்கை முழுவதும் ஒழிந்து போக வேண்டும். இனி
ஒவ்வொரு தினமும் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதத்தை
சார்ந்தவர்களாக இருந்தாலும், ஒரு நாள் மட்டும் பயிற்சி எடுத்து கொண்டு
கோயில் கருவறைக்குள் சென்று பூஜைகள் நடத்தலாம். இது எங்கள் கோயில் விதி"
என்றார்.
No comments:
Post a Comment