சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்தக் கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது.
No comments:
Post a Comment