சத்தீஸ்கரில், துணை ராணுவ படையினர் மீதான தாக்குதலின் போது, ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பி காப்பாற்ற, இந்திய விமானப் படை தவறி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள, சிந்தாகுபா வனப் பகுதியில், கடந்த, 1ம் தேதி, மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில், துணை ராணுவ படையினர், 14 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர்.இதுபற்றிய தகவல் கிடைத்தும், சத்தீஸ்கரில் உள்ள, நான்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றை கூட, சம்பவ இடத்திற்கு அனுப்ப விமான படை அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: சுக்மாவின் அண்டை மாவட்டமான பாஸ்தரின் ஜக்தல்பூரில், இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றையாவது, மீட்பு பணிக்கு உடனே அனுப்பி இருக்கலாம். ஆனால், மாலை வரை, ஹெலிகாப்டர்கள் புறப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன் மாவோயிஸ்டுகளால், துணை ராணுவத்தினர் தாக்கப்பட்டனர். அப்போதும், இந்திய விமான படை, ஹெலிகாப்டர்களை அனுப்பவில்லை; மாநில அரசு தான், சேதக் ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. சத்தீஸ்கர் விமான படை பிரிவின் பொறுப்பற்ற செயல், அங்குள்ள துணை ராணுவ படையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment