|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2012

வெள்ளைக் கன்று ஈன்ற எருமை...


கேரளாவில் விவசாயி ஒருவரின் எருமை மாடு கடந்த 10ம் தேதி வெள்ளைக் கன்று ஈன்றுள்ளது. இந்த அதிசயக் கன்றை வளர்க்கத் தேவையான உதவியை செய்ய அம்மாநில அரசு முன்வந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட அஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஷர்புதீன். அவர் கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள மாட்டு சந்தையில் பால் பண்ணை வைப்பதற்காக எருமை மாடுகளும், பசு மாடுகளும் வாங்கி பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சந்தையில் வாங்கிய ஒரு எருமை மாடு கடந்த 10ம் தேதி மதியம் ஒரு கன்றுகுட்டியை ஈன்றது.

கன்று குட்டியை கண்ட அவர் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். காரணம் அக்கன்றுக் குட்டி வெள்ளை நிறத்தில் இருந்தது தான். இது குறித்து அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கவே அப்பகுதியே திரண்டு வந்து கன்றுக்குட்டியை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.இந்த அதிசய கன்றுக்குட்டி குறித்து அப்பகுதியினர் கூறும்போது 1930ம் ஆண்டிலும், 1950ம் ஆண்டிலும் வெளிநாட்டில் மட்டுமே இது போன்று கன்றுக்குட்டி பிறந்ததாகவும் இந்தியாவில் இதுதான் முதல் முறை என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.இது குறிதது தகவல் அறிந்த கேரள அரசு இக்குட்டியை வளர்க்க உதவி செய்ய முன்வந்துள்ளது. இந்த அதிசய கன்றுக்குட்டிக்கு உரிமையாளர் அல்பீனா என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த கன்றுக்குட்டியை ரூ.3லட்சம் வரை கொடுத்து விலைக்கு வாங்க பலர் ஷர்புதீனை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க யு.எஸ். முடிவு!


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் மார்ச் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் இந்த நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மரியா ஒட்டேரா மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் ஆகியோர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானம் குறித்து ராஜபக்சேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைக் கொடுமைகள் தொடர்பாக ராஜபக்சே அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தரப்பில் ராஜபக்சேவிடம் இருவரும் வலியுறுத்தினர்.

அலட்டிக்காத ராஜபக்சே அமெரிக்காவின் இத்தகைய கண்டிப்பான அணுகுமுறையை எதிர்பார்க்காத ராஜபக்சே, சற்றும் அலட்டிக் கொள்ளாமல், "ம். நான் ஏற்படுத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பற்றி "ஆராய்ந்து" வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அக்குழுவின் பரிந்துரைகளை ராஜபக்சே உடனே நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் இதனால் சர்வதேச நாடுகளின் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் ராஜபக்சேவை எச்சரித்துள்ளனர். பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் கைவசம் வைத்திருக்கும் திட்டங்களை அமெரிக்காவிடம் தெரிவிக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தமிழர்களின் கட்சிகள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் கொண்டுவரப்பட உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவைப் போல் இந்தியாவும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. போருக்கு உதவி செய்த இந்தியா, போருக்குப் பின்னும் இலங்கை தமது நட்பு நாடாக இருக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் சீனா, பாகிஸ்தான் என இந்தியாவின் எதிர் முகாம்களோடு கை கோர்த்த ராஜபக்சே, இந்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எந்த ஒரு உருப்படியான அரசியல் தீர்வையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் மரியா ஒட்டேரியா மற்றும் ராபர்ட் பிளேக்குடன் வாசிங்டனில் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதேபோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியையும் மத்தாய் சந்தித்துள்ளார். இச்சந்திப்புகளின் போது ஐ.நா. தீர்மானத்தை ஆதரிப்பது என்று இருநாட்டு பிரதிநிதிகளும் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதனையடுத்தே அமெரிக்க் பிரதிநிதிகள் தமது கடுமையான நிலைப்பாட்டை இலங்கையிடம் நேரில் தெரிவிக்க பயணித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றமும் கிடுக்குப் பிடி ராஜபக்சே உருவாக்கிய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுங்கள் என்கிறது அமெரிக்கா. இதனிடையே இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வின் வல்லுநர் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. "இலங்கையின் இறுதிப் போரின்போது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் போர்க் குற்றங்கள் புரியப்பட்டமைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருப்பதால் அது பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்'' என்பது ஐ.நா. வல்லுநர் குழுவின் அறிக்கை.ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானது ஐரோப்பிய நாடாளுமன்றம். இலங்கையில் அமெரிக்க பிரதிநிதிகள் நெருக்கடி கொடுத்த நிலையிலே ஐரோப்பிய நாடாளுமன்றமும் ராஜபக்சேவுக்கு எதிராக அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

உள்நாட்டில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களின் கடுமையான நிலைப்பாடு ஒருபுறம் இருந்தாலும் சீனா நமக்கு ஆதரவாக இருக்கும் என திடமாக ராஜபக்சே நம்புகிறார்.இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நெருக்கடிகளுக்கு இலங்கை அரசாங்கம் பணிந்துவருகிறது. இலங்கையை மேற்குலக நாடுகளிடம் ராஜபக்சே மண்டியிட வைக்கிறார் என்று முக்கிய எதிர்க்கட்சியான ஜே.வி.பி. கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை மண்ணில் இருந்து கொண்டே இலங்கைக்கு எதிராக அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் கருத்து தெரிவிக்க எப்படி தைரியம் வந்தது என்று ஜே.வி.பி. பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

சொர்க்கத்துக்குப் போகும் பாதை


சொர்க்கம் , நரகம் செல்லுவதற்கான பாதை என்பது ஏதோ நீண்ட தூரத்தில் உள்ளது. அல்லது நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நாம் செய்யும் செயலில் தான் சொர்க்கம் மற்றும் நரகத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது என்பது தான் உண்மை. இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் உண்மையாக ஒவ்வொரு செயலையும் செய்தால் சொர்க்கத்தில வாசலுக்குள் நுழைந்து விடாலம்.  ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்ததன் பலனையும், ஒரு சத்தியத்தையும் தராசின் இரு தட்டுக்களில் வைத்தால், சத்தியமே மிகுந்திருக்கும் என்று மகாபாரதம் சொல்கிறது. வாய்மையே வெல்லும் என்று சொல்லப்படுவதற்குக் காரணம், சத்தியம் என்றுமே ஜெயிக்கும் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்குத்தான். என்றென்றும் - எப்போதும் உண்மை பேசி வாழ்பவன் - அதாவது சத்தியத்தையே தன் கொள்கையாகக் கொண்டு வாழ்பவன், கவலை இன்றி வாழ்கிறான். இப்படிப் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து வாய்மையின் வழி நின்றால், அவனுக்கு வாக் ஸித்தி உண்டாகும். அவன் சொல்வதெல்லாம் பலிக்கும் என்று ஆன்மிக நூல்களில் குறிப்புகள் இருக்கின்றன.  உண்மையே கடவுள். எல்லா அறங்களும் உண்மையைப் பின்தொடர்கின்றன என்பார் வால்மீகி. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏறவேண்டி வந்தாலும் தயாராக இருங்கள் என்பார் காந்திஅடிகள். பொறுமை, அடக்கம், நிதானம், அன்பு, நேர்மை, நியாயம் - இவை போன்ற குணங்களைக் கடைப்பிடித்து வாழும் ஒருவன் சத்தியம் தவற மாட்டான். இவற்றுள் எந்த ஒரு குணத்தை இழந்து விட்டாலும், நரகம் அவனுக்கு வலை விரித்துக் காத்திருக்கும். ஹக்குயின் என்ற பிரபல புத்த ஞானியிடம் ஜப்பானிய வீரன் ஒருவன் சந்தேகம் ஒன்றைக் கேட்டான். குருதேவா... சொர்க்கமும் நரகமும் இருப்பது உண்மைதானா? ஹக்குயின் அந்த வீரனை நோக்கி, நீ யார்? என்று கேட்டார். இந்த நாட்டு அரசனின் வீரம் மிக்க பாதுகாவலன் என்றான். முட்டாளே... உன் முகத்தை இதுவரை கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? கோழையைப் போல் தோற்றம் தரும் உன்னை வீரன் என்று எவன் ஒப்புக் கொண்டான்? என்று கேட்டார் புத்த ஞானி. வீரனுக்குக் கோபம் வந்தது. உடைவாளை உருவினான். ஹக்குயினைக் கண்டம்துண்டமாக வெட்டுவதற்கு நெருங்கினான். வீரன் தன்னை நெருங்குவதற்குள் ஹக்குயின் சிரித்தபடி சொன்னார். சற்றுமுன் நீ கேட்ட கேள்விக்குப் பாதி விடை கிடைத்து விட்டது. அதுதான் நீ திறந்து பார்த்திருக்கும் நரகம் என்ற உலகத்தின் பாதை. திடுக்கிட்டு சிலையாக நின்றான் வீரன். உருவிய வாளை உறைக்குள் போட்டான். ஞானியை சிரம் தாழ்த்தி வணங்கினான். புத்த ஞானி சட்டென்று சொன்னார்: நீ கேட்ட கேள்விக்கு மறு பாதி விடையும் இப்போது கிடைத்து விட்டது. சிந்திக்கத் துவங்கும்போது பொறுமையைக் கடைப்பிடித்தாய். சொர்க்கத்துக்குப் போகும் பாதை இதுதான்.

2 நாட்களாக இடைவிடாமல் முத்தம் கின்னஸ் சாதனை!





தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டாயா பீச்'. இங்கு 7 ஜோடிகள் கின்னஸ்' சாதனைக்காக முத்தம் கொடுக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முத்தப்போட்டி 13.02.2012 ஆரம்பித்து, இன்று (14.02.2012) காதலர் தினம் வரை நடக்கும். இந்தப் போட்டியில், இவர்கள் தங்கள் ஜோடியுடன் உதட்டோடு உதட்டை' வைத்து, இடைவிடாமல் முத்தம் கொடுக்கவேண்டும்.ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியே ஒரு சதுரமீட்டர் இடம் ஒதுக்கப்பட்டு, இந்தப்போட்டி நடக்கிறது. திடஉணவு மற்றும் திரவ ஆகாரம் ஆகியவற்றை  ஸ்டிரா' மூலம்தான் உட்கொள்ளவேண்டும். பல் துலக்கும்போதும்கூட உதடுகள்  விலகக்கூடாது'. அப்படி விலகும்பட்சத்தில், போட்டிக்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

போட்டி ஆரம்பித்த முதல் 3 மணி நேரத்திற்கு கழிப்பறைக்கு செல்ல, போட்டிக்கு  இடைவேளை' அனுமதிக்கப்படும்.
கடந்த வருடம் நடந்த முத்தப்போட்டியில் 46 மணிகள், 24 நிமிடங்கள், 9 நொடிகள் என்ற கால அளவில் இடைவிடாது முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை செய்த லக்கானா திரனரத் (வயது 31) என்ற பெண் தனது கணவருடன் மீண்டும் இந்த முறையும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த முறை மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடுகிறோம். இந்தமுறை போட்டி எவ்வளவு கடினமானதாக இருக்கப்போகிறது என்பதை பார்போம். எனினும், தங்கள் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வோம்' என்று லக்கானா திரனரத் கூறினார்.இந்த கின்னஸ் சாதனை  முத்தப்போட்டி'யில் வெல்லும் ஜோடிக்கு 3,333 அமெரிக்க டாலர் மதிப்பு வைர மோதிரமும், சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான 6,666 அமெரிக்க டாலர் மதிப்பு வவுச்சர்களும் பரிசாக அறிவித்துள்ளனர்.இந்த போட்டியில் ஜோடிகள் வெற்றி கொள்ள தங்கள்  காதலை' உணர்த்த  கடும்சோதனை'யை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

One Fine Dream - Tamil Short Film


Indha Oru Tharunam - Tamil Short Film with English Subtitles


13 February, 2012

இதே நாள்...


  • உலக காதலர் தினம்
  •  ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924)
  •  ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)
  •  103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
  •  ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)

Aegan tamil movie


Watch Sangamam (1999) movie Online


S.W.A.T Tamil Dubbed Movie Online


Love Today - Tamil movie online...


குழந்தை விற்பனை இணையதளத்தில் விளம்பரம்

 மெக்சிகன் இணையதளம் ஒன்றில், அழகான குழந்தை விற்பனைக்கு உள்ளது. அதன் உறுப்புகள் தேவைப்படுவோர் வாங்கிக் கொள்ளலாம் என்ற விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. விளம்பரத்தை பதிவு செய்தவர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயலை அடுத்து, இணையதளத்தில் மனிதர்களை, உடல் உறுப்புகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்ற விதிமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்...

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன்  ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.  பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.  தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.  காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.  குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை  முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.  சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.  குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.  குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை,  கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும்.  ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

இதே நாள்...


  • சர்வதேச வானொலி தினம்
  •  இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
  •  ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
  •  பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)
  •  பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)

10 February, 2012

Vanathai Pola.MOVIE ONLINE


Nerukku Ner - Tamil MOVIE ONLINE


மாசி மாத ராசிபலனும் பரிகாரமும்!

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1) திருப்தி துடிப்புடன் உழைத்து வாழ்வில் முன்னேறும் மேஷராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட குணத்துடன் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். செவ்வாய்க்கு இடம் தந்த சூரியனும், பாக்கியாதிபதி குருவும் செவ்வாயைப் பார்க்கின்றனர். இதனால் நேர்மையான செயல்பாடுகளை திறமையுடன் நிறைவேற்றுவீர்கள். சூரியன், புதன், சுக்கிரனின் நல்லருள் பலமாக துணை நின்று உதவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைத்திடும். புத்திரர்கள் மன குழப்பத்தால் படிப்பில் பின் தங்கலாம். பூர்வ சொத்தில் தாராள வருமானம் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். முக்கிய கடன்களை அடைப்பீர்கள். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். நண்பர்களிடம் அதிக கண்டிப்புடன் பேசவேண்டாம். தம்பதியர் அன்புடன் நடந்து திருப் தியான  சூழ்நிலையை உருவாக்குவர்.  தொழிலதிபர்கள் உற்பத்தி உயர்வும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து உபரி பணவரவு காண்பர். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்தி கரமான பணவரவு அடைவர். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியில் பாராட்டு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறக்கும். அரசியல்வாதிகள் கூடுதல் பதவி பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்.  பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் தாராள பணவரவு கிடைக்கும். உஷார் நாள்: 14.2.12 இரவு 10.11 - 17.2.12 அதிகாலை 1.22 மற்றும் 13.3.12 காலை 6.46 -  நள்ளிரவு 1.22. வெற்றி நாள்: மார்ச் 2, 3, 4  நிறம்: மஞ்சள், சந்தனம் எண்: 3, 6

 ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வெற்றி எதிலும் புதுப்பாணியை கடைபிடிக்க விரும்பும் ரிஷபராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்ச பலத்துடன் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளார். இதனால் உங்களின் செயல்பாடுகளில் வசீகரத்தன்மை வளரும். கூடுதல் நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சூரியன், புதன் செயல்படுகின்றனர்.வெற்றியும். பணவரவும் கிடைக்கும். இடம், பொருள் அறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வீடு, வாகனத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டியிருக்கும். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். புதியசொத்து சேர்க்கை கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். உடல்நலம் சீராக இருக்க கேளிக்கை விருந்துகளில் அளவுடன் பங்கேற்பது நல்லது. தம்பதியர் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமையாக இருப்பர்.  தொழிலதிபர்கள் இடையூறு தருகிற விஷயங்களை ஆராய்ந்து சரிசெய்வர். தொழில் வளர்ச்சியும் திட்டமிட்ட பணவரவும் கிடைக்கும். பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். கூடுதல் பணவரவு, சலுகை கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். பணிபுரியும் பெண்கள் இலகுவான மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். ஓய்வுநேரம் அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்துவர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். அரசியல்வாதிகள் தலைமையிடமும், மக்களிடமும் மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் வளரும். மாணவர்கள் நல்ல தரதேர்ச்சி பெறுவர். விளையாட்டு பயிற்சியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.  பரிகாரம்: சிவனை வழிபடுவதால் துன்பம் நீங்கும்.   உஷார் நாள்: 17.2.12 அதிகாலை 1.23 - 19.2.12 அதிகாலை 5.36. வெற்றி நாள்: மார்ச் 4, 5, 6       நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 2, 9

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) ஆர்வம் நியாயத்தை ஏற்கும் மனப்பக்குவம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலக் குறைவாகவும் மாத பிற்பகுதியில் நற்பலன் வழங்கும் வகையிலும் உள்ளார். செவ்வாய், ராகு, குரு நல்ல இடங்களில் உள்ளனர். குடும்ப செலவுக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். மனதில் ஆர்வமும்,  நம்பிக்கையும் வளரும். வீடு, வாகன வகையில் அளவான நன்மை உண்டு. புத்திரரின் பிடிவாத குணம் குடும்பத்தில் சிறு அளவில் சிரமம் தரும். சொத்து தொடர்பான ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் சிறிய முயற்சியினால் எளிதில் வசூலாகும். தம்பதியர் தமது பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்துகொள்வர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும். நண்பர் சொல்லும் ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய பாதையை உருவாக்கும்.  வெளியூர் பயணம் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும்.  தொழிலதிபர்கள் தரத்தை உயர்த்தி புதிய ஒப்பந்தங்களைக் காண்பர். தாராள பணவரவில் கடன்களை அடைப்பீர்கள். பணியாளர்கள் சலுகைகளைப் பெறும் ஆர்வத்தில் லட்சிய மனதுடன் செயல்படுவர். வியாபாரிகள் கூடுதல் விற்பனை, உபரி பணவரவு, தகுந்த சேமிப்பால் மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பயன்படுத்தி பணியை எளிதாக்குவர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நற்பெயர் பெறுவதில் அதிக கவனம் கொள்வது நல்லது. பயன்பாடு இல்லாத வீட்டு சாதனம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்தி புதிய சந்தைவாய்ப்புக்களை பெறுவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர் களிடம் நன்மதிப்பு பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சராசரி அளவில் இருக்கும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்ப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி அதிகரிக்கும்.  பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தொழில்வளம் சிறக்கும். உஷார் நாள்: 19.2.12 காலை 5.37 -21.2.12 காலை 11.15 வெற்றி நாள்: மார்ச் 7, 8 நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 4, 9

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உஷார் பரந்த மனமும் உழைப்பில் ஆர்வமும் நிறைந்த கடகராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சந்திரன், மாத துவக்கத்தில் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் உள்ளார். இதனால் சிந்தனையில் விவேகமும் செயல்திறனும் அதிகரிக்கும். நற்பலன் தரும் கிரகங்களாக புதன், சுக்கிரன், கேது உள்ளனர். ராசிக்கு தர்ம அதிபதியான குரு, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து கர்ம அதிபதியான செவ்வாயை பார்க்கிறார். இந்த நிலை உங்கள் வாழ்வில் தர்ம, கர்ம யோக பலன்களை பெற்றுத்தரும். வரம்பு மீறி பேசுவதை தவிர்க்கவும். தைரியம், நம்பிக்கை மிகவும் தேவை. பயணத்தில் மிதவேகம் வேண்டும். வீட்டில் பராமரிப்பு, பாதுகாப்பு அவசியம். புத்திரர் ஆடம்பர உணவு வகைகளை உண்பதில் விருப்பம் கொள்வர். குடும்பச்செலவு அதிகரிக்கும். தம்பதியர் குடும்பத்தேவை, சூழ்நிலை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவர். நண்பர்களால் உதவி உண்டு. வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்ளலாம்.  தொழிலதிபர்கள் அரசின் தொழிலியல் சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றுவது நலம்தரும். உற்பத்தி, பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரிகள்விற்பனை இலக்கை அடைந்தாலும்ஓரளவுக்கே லாபம் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படுவது நல்லது. சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை நிறைவேற்றுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்பைத் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான பணமின்றி தவிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான விற்பனை, சுமாரான லாபம் அடைவர். அரசியல்வாதிகள் தங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காண்பர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் தான் தேர்ச்சி பெற முடியும். கவனம் சிதறும். உஷாராக இருக்கவும்.  பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் பாதுகாப்பும், நற்பலனும் கிடைக்கும்.  உஷார் நாள்: 21.2.12 காலை 11.16 -  23.2.12 இரவு 9.31. வெற்றி நாள்: மார்ச் 9, 10     நிறம்: ரோஸ், இளஞ்சிவப்பு எண்: 1, 7    

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1) இனிமை துணிச்சலும், செயல்திறனும் மிக்க சிம்மராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சூரியன் ஏழாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் புதனுடன் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ராசியில் உள்ள செவ்வாயை ராசிநாதன் சூரியன் மற்றும் குரு பார்க்கின்றனர். மொத்தத்தில் இனிமையே.  குடும்ப உறுப்பினர்கள் மாத முற்பகுதியில் உங்கள் செயல்பாடுகளுக்கு உதவ தயங்குவர். பிற்பகுதியில் நிலைமை சரியாகும். இளைய சகோதரர்களுக்கு தேவையான பணஉதவி செய்வீர்கள். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை அறிந்து நல்லவிதமாக நடந்துகொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த ஓய்வு, மருத்துவ சிகிச்சை பலன் தரும். மாத முற்பகுதியில் தாமதமான பணவரவு, பிற்பகுதியில் வந்துசேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடமும் அளவுடன் பேசுவதால் சிரமம் தவிர்க்கலாம். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி உண்டு.  தொழிலதிபர்கள் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியை உயர்த்துவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை புதிய உத்திகளை பயன்படுத்தி நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகை மாத பிற்பகுதியில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப் பணிகளை சுறுசுறுப்பாக நிறைவேற்றுவதால் நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், சச்சரவு இல்லாத நன்னிலை தொடரும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய முயற்சியால் கூடுதல் வாய்ப்புபெறுவர். அரசியல்வாதிகள் இதமான அணுகுமுறையால் அரசின் சலுகைகளைப் பெறுவர். சமூக அந்தஸ்து உயரும். விவசாயிகளுக்கு நடைமுறை செலவு கூடினாலும் மகசூல் அதிகரித்து தாராள பணவரவு இருக்கும். மாணவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து தரத் தேர்ச்சி பெறுவர்.  பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.     உஷார் நாள்: 23.2.12 இரவு 9.32 - 26.2.12 காலை 7.32. வெற்றி நாள்: பிப்ரவரி 13, 14         நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 5

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2) வளர்ச்சி தாய் மீது அன்பு மிக்க கன்னிராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் புதன் மாத முற்பகுதியில் அனுகூலமாகவும் மாத பிற்பகுதியில் பலம் குறைந்தும் கும்ப, மீன ராசிகளில் இடம்பெறுகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக ராகு, சூரியன் செயல்படுகின்றனர். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு,வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புத்திரர்களின் செயல்பாடு திருப்தி தரும். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் குறையும். எதிரிகள் தானாகவே விலகிச் செல்வர். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமார். வருமானம் சிறப்பாக அமையும். பழைய கடன் அடைபட வாய்ப்புண்டு. தம்பதியர் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து நடந்தால் மட்டுமே வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானத்தைப் பின்பற்றுவது நல்லது.  தொழிலதிபர்கள் பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவர். தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்டவசமாக புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்று லாபம் கூடும்.வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பர். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி நிர்வாகத்தினரிடம் பாராட்டு காண்பர். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு குறித்த காலத்தில் பணியை நிறைவேற்றுவர்.  குடும்ப பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்படுவது நல்லது. பிறரது அவதூறு பேச்சைப் பொருட்படுத்தக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கச் செய்வர். புதிய ஆர்டர் கிடைக்கும். அரசியல்வாதிகள் அந்தஸ்தை உயர்த்த அதிக பணம் செலவழிப்பர். புத்திரர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சல் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் உண்டு. மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் நன்கு படிப்பர்.  பரிகாரம்: விநாயகரை வழிபாடு நன்மை தரும்.  உஷார் நாள்: 26.2.12 காலை 7.33 - 28.2.12 இரவு 7.12  வெற்றிநாள்: பிப்ரவரி 15, 16 நிறம்: சிவப்பு, மஞ்சள் எண்: 3,5

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சுமார் கலை உணர்வுடன் எச்செயலிலும் ஈடுபடும் துலாம் ராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று மாறுபட்ட குணத்துடன் செயல்படுகிறார். இந்த மாதம் நல்ல பலன் வழங்கும் கிரகங்களாக குரு, செவ்வாய் உள்ளனர். உங்களுக்கு சம்பந்த மில்லாத விஷயங்களில் ஈடுபடுவதால் வீண்செலவு, அவப்பெயர் உண்டாகலாம் கவனம்.  வீடு, வாகனத்தில் பராமரிப்புச்செலவு கூடும். தாயின் தேவையை நிறைவேற்ற தாமதிப்பீர்கள். புத்திரர்கள் பிடிவாதமாக நடந்து கொண்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் நிலைமை சரியாகும். சொத்தின் பேரில் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும். உடல்நிலை அதிருப்தி தரும். அலைச்சலால் அசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். நண்பர்களின் உதவி  கிடைக்கும்.  தொழிலதிபர்கள் எதிர்வரும் தடைகளை சரிப்படுத்தினால் மட்டுமே உற்பத்தி சிறக்கும்.  நிர்வாகச் செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணியில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். வியாபாரிகள் கூடுமான வரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.  பணிபரியும் பெண்கள் பணிச்சுமையை சந்திப்பர்.  பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. குடும்பப் பெண்கள் குடும்பநலன் சிறக்க பாடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், கடின உழைப்பின் மூலம் சுமாரான விற்பனை காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற பெரும் பொருள் செலவழிப்பர். அரசியலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஓரளவு விளைச்சலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சி கிடைக்கும்.  பரிகாரம்: சாஸ்தாவை வழிபாடு நன்மை தரும்.   உஷார் நாள்: 28.2.12 இரவு 7.13 - 1.3.12 காலை 6.07. வெற்றிநாள்: பிப்ரவரி 17, 18   நிறம்: ஊதா, ஆரஞ்ச் எண்: 1, 8

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) கவனம் எந்தச் சூழலையும் தைரியமாய் எதிர்கொள்ளும் விருச்சிகராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாம் இடமான சிம்மத்தில் அனுகூலக்குறைவாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன் உள்ளனர். உங்கள் செயல்திறமையில் பொறாமை கொண்ட சிலர், உங்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பர் கவனம். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு தேவை. வாகனம் இயக்கும் போது மிதவேகம் அவசியம். புத்திரர்கள் மாத முற்பகுதியில் உங்கள் சொல்படி நடந்தும் பிற்பகுதியில் முரண்பட்ட குணத்துடனும் செயல்படுவர். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். மனைவி, மகளின் ஜாதக யோக பலன் குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். வெளியூர் பயணங்களை அவசியம் இருந்தால் மட்டும் மேற்கொள்வது நல்லது.  தொழிலதிபர்கள் போட்டியாளர்களின் குறுக்கீடுகளை தவிர்க்க தகுந்த மாற்று நடவடிக்கை எடுப்பர். வியாபாரிகள் லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவர். பணியாளர்களுக்கு சோம்பல் அல்லது உடல்நிலை காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். சலுகைகளை கேட்பதில் அவசரம் கூடாது. பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. குடும்பப் பெண்கள்  கணவருடன் ஒற்றுமையாக இருப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு விற்பனை மற்றும் லாபம் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் எதிரிகளால் வரும் தொல்லையைச் சரிசெய்ய கூடுதல் பணம் செலவழிக்கும் நிலை உண்டு. முக்கியஸ்தர்களின் சிபாரிசால் பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூடுதலாகும். வருமானம் சுமார். மாணவர்களுக்கு வெளிவட்டார பழக்கத்தால் படிப்பில் கவனம் சிதறும். உஷாராக இருங்கள்.  பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும்.  உஷார் நாள்: 2.3.12 காலை 6.08 - 4.3.12  பிற்பகல் 2.56 . வெற்றி நாள்: பிப்ரவரி 19, 20           நிறம்: மஞ்சள், நீலம் எண்: 3, 4

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)  உற்சாகம் நம்பிக்கையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார். நவக்கிரகங்களில் ராகு, செவ்வாயைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் இந்த மாதம் உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். சமூகப்பணியில் விருப்பத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். கவுரவம் மிக்க மனிதராக வலம் வருவீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் மனதில் உற்சாகம் கரை புரளும். வீடு, வாகனத்தில் தேவையான புதிய மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்து வாங்கும் சூழல் உருவாகும். இஷ்டதெய்வ வழிபாடு சிறக்கும். எதிரிகள் கூட உங்களின் வளர்ச்சியைக் கண்டு வியப்பர். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர்.   தொழிலதிபர்கள் அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காண்பர். வியாபாரிகள் விற்பனையில் வளர்ச்சி காண்பதுடன் விரிவாக்கப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு பெறுவர். பணிபுரியும் பெண்கள் சகபணியாளர்களின் நட்புறவைப் பெறுவர். பதவி உயர்வு, விரும்பியஇடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பப் பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத் தேவைக்கான பணவசதி கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கையும் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் திட்டமிட்டு செயல்பட்டு உற்பத்தியைப் பெருக்குவர். அமோக விற்பனையால் லாபம் கூடும். வருமானம் உயர்வதால் மனதில் நம்பிக்கை வளரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நல்ல ஆதரவுடன் திட்டங்களை நிறைவேற்றுவர். அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு தாராள மகசூலும் கால்நடை வளர்ப்பில் உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் சாதனை நிகழ்த்தும் விதத்தில் நன்கு படிப்பர். விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.  பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் பலன்கள் மேலும் அதிகரிக்கும்.   உஷார் நாள்: 4.3.12 பிற்பகல் 2.57 - 6.3.12 இரவு 9.19.  வெற்றி நாள்: பிப்ரவரி 21, 22, 23      நிறம்: பச்சை, சிமென்ட் எண்: 4, 9

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) செலவு ஆர்வத்துடன் கடமையாற்றும் மகர ராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாம் இடத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த மாதம் நற்பலன் தருகிற கிரகங்களாக சுக்கிரன், ராகு உள்ளனர். உங்கள் செயல்திறன் மேம்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடு கண்டு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு நச்சரிப்பர்.  வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாதத்துடன் செயல்படுவர். சொத்து தொடர்பான ஆவணம், விலை மதிப்புள்ள பொருள்களை மற்றவர் பொறுப்பில் கொடுக்கக் கூடாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பணவரவு சுமார் என்பதால், குடும்பத் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் நடந்து கொள்வர்.   தொழிலதிபர்கள் விடாமுயற்சியுடன் உற்பத்தியை சீராக்கி லாபம் காண்பர்.  வியாபாரிகள் சந்தையில் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பதுடன், நடைமுறைச் செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள் குறுக்கிடும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவர். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட்டாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களின் பாராட்டைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனையும், அதற்கேற்ற வருமானமும் காண்பர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். பொது விவகாரங்களில் தலையிடும் போது அதிக கவனம் அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் வீண்பொழுதுபோக்கை குறைத்துக் கொள்வது நல்லது. கவனமுடன் படித்தால் மட்டுமே தேறுவர்.  பரிகாரம்: அம்பாளை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.   உஷார் நாள்: 6.3.12 இரவு 9.20- 9.3.12 அதிகாலை 1.31  வெற்றி நாள்: பிப்ரவரி 24, 25  நிறம்: வெள்ளை, ஆரஞ்ச் எண்: 2, 9

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நிதானம் சாதனை நிகழ்த்தி முன்னேறத் துடிக்கும் கும்பராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் சனிபகவான் பாக்ய ஸ்தானம் துலாத்தில் உச்சம் பெற்று அனுகூலக்குறைவாக உள்ளார். இந்தமாதம் நவக்கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டி உதவுகிறார். சமூகத்தில் இருக்கும் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மை தரும். பணத்தேவை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை குறைவான யாருக்கும் இடம்தருவது கூடாது. புத்திரர்கள் தகுதிக்குறைவான நபர்களிடம் பழகுவதற்கான கிரகநிலை உள்ளது.  தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது அவசியம். வயிறு தொடர்பான தொந்தரவு ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.  தொழிலதிபர்கள் மூலதனத் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். தொழிலாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் சுமார். வியாபாரிகள் சந்தையில் போட்டிகளைச் சந்திப்பர். ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாக பணிகளைச் செய்வதால், நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது நல்லது. சலுகைகளைப் பெற காத்திருக்க நேரிடும். குடும்ப பெண்கள் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சீரான வளர்ச்சி பெறுவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். விவசாயிகளுக்கு மிதமான மகசூலும் அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியோடு கலைத்துறையில் ஈடுபாடு கொள்வர். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.  பரிகாரம்: பெருமாளை வழிபடுவது சிறப்பு.    உஷார் நாள்: 9.3.12 அதிகாலை 1.32- 11.3.12 அதிகாலை 4.23  வெற்றி நாள்: பிப்ரவரி 26, மார்ச் 12, 13        நிறம்: ஊதா, சிவப்பு எண்: 1, 8

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஜாதகம் பணிகளை ஆர்வமுடன் செய்யும் மீனராசி அன்பர்களே!  உங்கள் ராசிநாதன் குரு, ராசிக்கு இரண்டாம் இடத்தில் அனுகூலத்தன்மையுடன் உள்ளார். கேது, செவ்வாய், சுக்கிரன் தங்கள் பங்கிற்கு கூடுதல் நற்பலன்களை வழங்குவர். புதிய திட்டங்களில் வெற்றி ஏற்படும். சகோதர வகையில் சுபமங்கல நிகழ்வு உண்டு. வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே, திருடுபோவதை தவிர்க்கலாம். தாயாருக்கு சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் மந்தகதியில் இயங்குவர். கடன் கொடுத்த பணம் வசூலாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.குடும்பத்தின் முக்கிய தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்களுக்கு இயன்ற உதவி செய்வீர்கள். சொத்து வாங்க விரும்புபவர்களுக்கு சாதகமான காலம். வெளியூர் பயணத்தால் கூடுதல் பணச்செலவும் கால விரயமும் ஏற்படலாம். பயணங்களை முக்கியத்துவம் கருதி ஏற்பது நல்லது.  தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் இடையூறு அணுகாத சுமூகநிலை அடைவர். ஓரளவுக்கு சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை உயரும். லாபவிகிதம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணிக்கு சிறப்பு சேர்த்திடுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். குடும்ப பெண்கள் கணவரின் கருத்து, எண்ணங்களை மதித்து நடப்பர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழிற்கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பயிருக்கு நல்ல விலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் பின்தங்கலாம். கவனம்.  பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் தொழில் சிறந்து சொத்து சேர்க்கை கிடைக்கும். உஷார் நாள்: 13.2.12 காலை 6.01 - 14.2.12 இரவு 10.10  மற்றும் 11.3.12 அதிகாலை 4.24 - 13.3.12 காலை 6.45 . வெற்றி நாள்: பிப்ரவரி 28, மார்ச் 7, 8    நிறம்: நீலம், ரோஸ் எண்: 4, 7

இதே நாள்...


  •  புதுடில்லி, இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது(1931)
  •  கிறிஸ்தவ பெண்கள் இளையோர் அமைப்பு(ஒய்.டபிள்யூ.சி.ஏ.,) அமைக்கப்பட்டது(1870)
  •  மடகஸ்கரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது(1897)
  •  பிரான்ஸ், க்யூபெக் மாநிலத்தை யூ.கே.,விற்கு அளித்தது(1763)
  •  அலெக்சன் கிரேன், தீயணைப்பு கருவியின் காப்புரிமம் பெற்றார்(1863)

ஈரான் படத்தை தழுவி மெரினா!


சிவகார்த்திகேயன் ஹீரோவாக தோன்றியிருக்கும் மெரினா திரைப்படம் ஈரான் படத்தின் பாதிப்பில் உருவானது என புதுக்கதை கிளம்பியிருக்கிறது கோடம்பாக்கத்தில்!  யதார்தமாக படம் பண்ணும் டைரக்டர் என்ற பெயரை பெற்றுள்ள இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தின் காஸ்டிங் முதல் ஆடியோ லாஞ்ச் வரை எல்லாமே யதார்த்தமாகவே அமைய வேண்டும் என நிறையனே மெனக்கட்டிருந்தார்.  இந்நிலையில் மெரினா கதையும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்த சினிமாவிற்கு பிரசித்தி பெற்ற ஈரான் திரைப்படத்தின் தழுவல் என கோலிவுட் இணை, துணை இயக்குநர்கள் கொக்கரிக்க துவங்கி இருக்கின்றனர்.  ஈரானிய சினிமாவின் பிரபல இயக்குநர் அமீர் நடேரி இயக்கத்தில் 1985-ல் வெளிவந்த தவந்தே என்ற குழந்தைகள் படத்தின் பாதிப்பில் இருந்தே மெரினாவை உருவாக்கியிருக்கிறார் என வாதத்தை எடுத்து வைக்கிறது இணை,துணை இயக்குநர் தரப்பு. தவந்தே படமும், (The Runner (Persian: Davandeh) is a 1985 film by Amir Naderi,)படமும், கல்வியையை இழந்து கடற்கரை மற்றும் ஹார்பர்களில் அலைந்து திரியும் ஆதரவற்ற ஈரானிய குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது கனவுகளை சித்தரிக்கும் படமே என்கிறார்கள்.   இருப்பினும் பசங்க பாண்டிராஜை பழி சொல்லாமல், இந்தப் படத்தின் பாதிப்பில் பல உதவி இயக்குநர்கள் திரைக்கதை அமைத்து வைத்திருந்தார்களாம். ஆனால் பாண்டிராஜ் முந்திக்கொண்டார் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...