எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே, அவரது ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 17 நாள் போராட்டத்துக்கு பிறகு முபாரக் பணிந்தார். பதவியில் இருந்து வெளியேறினார்.
தற்போது ஆட்சி அதிகாரம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அரசியல் சட்டத்தில் மாற்றம் வேண்டும். புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே, அதிபர் தேர்தலை விரைவில் நடத்த ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அதிபர் தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து எகிப்தில் உள்ள கெய்ரோ, ஷமாலேக், ஜிஷா, ஷாகாஷிப் உள்ளிட்ட பல நகரங்களில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஏராளமான மக்கள் வாக்குச் சாவடிகள் முன்பு நீண்ட “கியூ” வரிசையில் நின்று காத்திருந்தனர்.
வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டதும் ஆர்வத்துடன் சென்று வாக்களித்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களித்ததன் மூலம் தாங்கள் ஜனநாயகத்தை ருசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதன் மூலம் புதிய எகிப்தை உருவாக்க இருப்பதாகவும் கூறினர்.
No comments:
Post a Comment