|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதியிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை வரும் 31-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ளது. அதனையொட்டி குற்றப்த்திரிக்கை தயாரிக்கும் பணியில்  பணியில் சி.பி.ஐ. இறங்கியுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் தி.மு.க.தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் சேர்க்கப்படலாம் என்று சிஎன்என்-ஐபிஎன்னுக்கு சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் சட்டப்பிரிவு 120பி(மோசடி மற்றும் ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் சேர்க்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆர்.டி.ரியால்டி குரூப்பில் இருந்து ரூ. 200 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் யுனிடெக் நிறுவனத்திற்கு டாடா ரியாலிட்டி நிறுவனமானது ரூ.ஆயிரத்து 700 கோடிக்கு கடன் கொடுத்திருப்பது தொடர்பாகவும் சி.பி.ஐ. தீவரமாக விசாரணை நடத்தி வருகிறது. டாடா நிறுவனங்களின் துணை நிறுவனமான ஓல்டாஸ் நிறுவனமானது கனிமொழியின் உதவியாளருக்கு சென்னையில் நிலமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலபரிமாற்றமானது ஆ.ராசாவிடம் இருந்து இரட்டை தொழில்நுட்ப லைசன்ஸ் பெற்றதற்காக இருக்கலாம் என்றும் தெரிகிறது. 
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குற்றம்சாட்டப்பட்டவர் அல்ல. அல்லது சந்தேகப்படும்படியான நபரும் அல்ல. இருந்தபோதிலும் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு சாட்சி என்ற முறையில் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்வோம். அதற்காக 15 முதல் 20 கேள்விகள் வரையுள்ள ஒரு கேள்வித்தாளை தயாரித்து வைத்திருக்கிறோம் என்று  ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரித்து வரும் ஒரு மூத்த சி.பி.ஐ. அதிகாரி கூறினார். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீட்டிற்காக தொலைதொடர்புத்துறை கொள்கையையே ஆ.ராசா மாற்றம் செய்தது உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வி கருணாநிதியிடம் முதலில் கேட்கப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்வர் கருணாநிதியிடம் வருகின்ற 29-ம் தேதிக்குள் விசாரணை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை வருகின்ற 31-ம் தேதிதான் தாக்கலாகும் என்று தெரிகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் மேலும் யார் யார் சேர்க்கப்படுகிறார்களோ தெரியவில்லை. தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,தொலைதொடர்புதுறை விதிமுறைகளில் சில மாற்றத்தை செய்தார். அந்த மாற்றத்தை அதற்கு பின்னர் அமைச்சராக வந்த ராசா,தனக்கு சாதகமாக்கிக்கொண்டார். மேலும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்றும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டார். இதை ஆ.ராசா மறைத்துவிட்டாரா? அல்லது உங்களுக்கு தெரியுமா என்று கருணாநிதியிடம் கேட்கப்படும்.  அடுத்ததாக சில தகவல் தொடர்பு கம்பெனிகளுடன் ஆ.ராசாவுக்கு இருந்த தொடர்பு குறித்து தெரியுமா என்று கேட்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும் கடந்த புதன்கிழமை நடந்த விசாரணையின்போது ராசா தொடர்பு வைத்திருந்த அந்த 2 கம்பெனிகளின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்று சி.பி.ஐ. சார்பாக தெரிவிக்கப்பட்டது. எங்களுடைய விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதால் நாங்கள் அனைத்து விஷயங்கள் குறித்தும் முழுமையாக விசாரிப்போம். தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி இருப்பதால் ராசாவின் நடவடிக்கைகள் குறித்து கருணாநிதிக்கு தெரியுமா அல்லது தெரியாதா என்பதற்கு விளக்கம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...