|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 April, 2012

தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!

ஆயிரம்தான் சொல்லுங்கள், தமிழன் என்ற இனத்துக்கு தனி குணமும் பண்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. செய்தித் தாள்களைத் திறந்து நூறு செய்திகளைப் படித்தாலும் அதில் ஒன்றிரண்டாவது தமிழ் இனத்தின் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்துவிடுவதே இந்த இனத்தின் சிறப்பு.
கடந்த சில நாள்களாகவே செய்தித் தாள்களைப் படிக்கும்போது கண்ணில் படும் ஒரு செய்தி, ""ரத்தக் காட்டேரி பீதி'' என்பது. காதல், வீரம், கொடை ஆகிய மூன்றிலும் ""பேர் போனவன்'' தமிழன்.


இந்தக் காதலிலும் நல்ல காதல், கள்ளக் காதல் என்று ரகம் பிரித்து அனுபவிப்பவன். காதல் எப்படியோ போகட்டும், நாம் ரத்தக் காட்டேரிக்கு வருவோம். ஜோலார்பேட்டையில்தான் முதலில் ரத்தக் காட்டேரி தனது சேட்டையைக் காட்டியது. அங்கிருந்து இப்போது ஆம்பூரில் மையம் கொண்டிருக்கிறது. சுமார் 40 கிராமங்களில் ஒரே நாளில் வீடுகளில் உள்ள தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் எடுத்து வீசியிருக்கிறது. இது ரத்தக் காட்டேரிதான் என்று வருவாய்த்துறை வட்டாட்சியரோ, வருவாய் ஆய்வாளரோ, மாவட்ட வருவாய் அதிகாரியோ சான்று தரவில்லை என்றாலும் (ரத்தக் காட்டேரி என்ன இலவசப் பட்டாவுக்கா மனுச்செய்யப் போகிறது?) உள்ளூர் மந்திரவாதிகள் சான்றுரைத்துள்ளனர். ஒவ்வொரு ஊரிலும் ஒரு டாக்டர், ஆசிரியர் இருக்கிறாரோ இல்லையோ மந்திரவாதியும் ஜோதிடரும் இருப்பார்கள். அதுதான் தமிழர்களின் தொன்மை.


வீடுகளில் இரவு நேரத்தில் திடீரென்று சூறைக் காற்றைப் போல ஏதோ வீச, தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் அலமாரியிலிருந்தும் சிமென்ட் மேடைகளிலிருந்தும் கீழே விழுந்து சிதற, வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தூக்கத்திலிருந்து விழித்து அலற ஊரே அமர்க்களப்படுகிறது.
வீதிக்கு வந்தால்தான் தெரிகிறது அதே போல பல வீடுகளிலும் காட்டேரி நுழைந்திருக்கிறது என்று. உடனே வீட்டு வாசலில் மஞ்ச(ள்) தண்ணியால் வாசல்படிகளை மெழுகி, குங்குமம் "மஞ்சா' வைத்து, எலுமிச்சை, படிகாரம், பூசணிக்காயில் பூத உருவம் போன்ற ரட்சைகளைக் கட்டி தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்கின்றனர். அத்துடன் மந்திரவாதியை அழைத்து ஆடு, கோழி அறுத்து காட்டேரிக்கு பலி கொடுக்கின்றனர். முத்தாய்ப்பாக ""இன்று போய் நாளை வா'' என்று தமிழில் எழுதி திரிசூலம் படமும் வரைந்து வைக்கின்றனர். இந்த இடத்தில்தான் தமிழனின் பகுத்தறிவு, பண்பாடு அனைத்தும் பட்டொளி வீசிப் பறக்கிறது!


அந்தக் காட்டேரி ஆணோ - பெண்ணோ, சிங்கிளோ - தம்பதியோ, சைவமோ - அசைவமோ தெரியாது. அதன் நிறம் என்ன, உருவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் அது ""தமிழ் காட்டேரி'' என்பதை மட்டும் சரியாகத் தெரிந்துவைத்துள்ளனர்.""இன்று போய் நாளை வா(ராய்)'' என்று தமிழில் எழுதி வைத்தால் அதைப் படித்துவிட்டு காட்டேரி அந்த வீட்டைவிட்டுப் போய்விடுகிறது. சி.எஸ். ஜெயராமன் குரலில் பாட வேண்டிய அவசியம் இல்லையோ? அடுத்த நாள் வந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஏமாந்து போய்விடும் போல இருக்கிறது.காட்டேரியை இப்படி தினமும் ஏமாற்றினால் ஒரு நாள் கோபத்தில் அது வீட்டுக்கதவில் இருப்பதைப் படிக்காமலேயே ஏதாவது செய்துவிடப் போகிறது, எச்சரிக்கையாக இருங்கள்.) இந்தக் காட்டேரி ஜோலார்பேட்டையிலிருந்து இப்போது ஆம்பூருக்கு வந்திருக்கிறது. இதே வடக்கு நோக்கி நகர்ந்து குப்பம், கொப்பல் என்றெல்லாம் போயிருந்தால் அதுவே ""30 நாள்களுக்குள் தெலுங்கு, கன்னடம்'' புத்தகத்தை வாங்கிப் படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியறிவு வளர்ந்திருப்பது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக்குவீடு இப்படி எழுதுவார்களா? கிராம மக்கள் மட்டும் அல்ல, காட்டேரி கூட படித்திருக்கிறது பாருங்களேன்.


தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். எவ்வளவோ இலவசங்களை மக்களுக்குத் தந்து அவர்களை ""விலையில்லா தமிழர்களாக'' வளர்த்து வருகிறீர்கள். ""இன்று போய் நாளை வா'' என்பதை நெடுஞ்சாலைத் துறை அல்லது உள்ளாட்சித் துறை மூலமாகவே ஒவ்வொரு வீட்டிலும் இலவசமாக எழுதிக் கொடுத்தால் என்னவாம்? (அதிகாரிகளுக்கு வேண்டுகோள், திரிசூலம் மட்டும் போடுங்கள், வேறு படம் வேண்டாம், காட்டேரி பயப்படப் போகிறது!) சில நாள்களுக்கு முன்னால்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு பகுத்தறிவுத் திருமண வீட்டில் கேட்டார், ""பெரியார் இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் படித்திருக்க முடியுமா, அரசு வேலைக்கு வந்திருக்க முடியுமா?'' என்று. காட்டேரியைக் கண்டு திராவிடம் அஞ்சுவதா? எதற்கெதற்காகவோ எல்லாம் தீக்குளிப்பேன் என்று ஆவேசப்படுபவர்கள், குறைந்தபட்சம் ஜோலார்பேட்டை, ஆம்பூர் பகுதிகளில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்தால்தான் என்ன? சும்மாதானே இருக்கிறார்கள்...

விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!

தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது!
கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை.சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்!
ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்!

சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்! இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். "தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார். 1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை.

"அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது. "முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது.
நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்!
காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்! இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள். 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும். ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே!
வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே. ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்!

500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார்.500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா? ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது? திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்! ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது!

காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது! கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா?

மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம். கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள். இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது! பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா.சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே? பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே?


பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது! ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்! ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்! தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும். ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.


திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்?
ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு?
திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்! சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்! நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்! காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!

எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும்!

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் 3 படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படமாகும். கொலவெறி பாடல் வெற்றி, தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் படம், மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை என பல்வேறு விளம்பரங்களுடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.இப்படம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வி அடைந்ததா என்று அப்படத்தின் கதாநாயகன் தனுஷிடம் கேட்டதற்கு, படம் வெற்றியா தோல்வியா என்றெல்லாம் தெரியாது, பட விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் கிடைத்துவிட்டது என்று மட்டும் தெரியும் என்று பதில் அளித்தார்.இவரே இப்படி சொன்னால் நாம் யாரிடம் கேட்பது. படம் பார்த்த ரசிகர்களே நீங்களாவது சொல்லுங்கள்... எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சியாகணும்

11 April, 2012

எழுச்சி பெறுமா சென்னை கிங்ஸ்



சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் பொறுப்பாக ஆடி, வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணி காத்திருக்கிறது.சென்னை அணியின் ஆட்டம் நிலையில்லாமல் உள்ளது. முதலில் மும்பையிடம் வீழ்ந்தது. பின் டெக்கான் அணியை வென்றது. அடுத்து டில்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இன்று சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

சாதிப்பாரா ஜடேஜா:சென்னை அணிக்கு கடந்த மூன்று போட்டியிலும் சிறந்த துவக்கம் கிடைக்கவில்லை. பிளசிஸ், முரளி விஜய் ஜோடி எழுச்சி பெறும் பட்சத்தில் நல்ல துவக்கம் கொடுக்கலாம். ரெய்னா நிலைத்து நின்று ஆட வேண்டும். தோனி, பத்ரிநாத், டுவைன் பிராவோ ஆகியோர் மந்தமான ஆட்டத்துக்கு விடைகொடுத்து, அதிரடிக்கு மாறுவது அவசியம். ரவிந்திர ஜடேஜா தனது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டும். கடந்த போட்டியில் நான்கு பேர் ரன் அவுட்டானது சிக்கலை ஏற்படுத்தியது. இத்தவறு தொடரக் கூடாது.சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் ஆல்பி மார்கல், போலிஞ்சர் நம்பிக்கை அளிக்கின்றனர். சொந்த மண்ணில் இன்று அஷ்வின், ஜகாதி. ஜடேஜா "சுழல்' ஜாலம் காட்டினால் நல்லது. 

கெய்ல் எதிர்பார்ப்பு:பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. கோல்கட்டா அணிக்கு எதிராக ஏமாற்றிய கிறிஸ் கெய்ல், இன்று சிக்சர் மழை பொழியலாம். இவருக்கு புஜாரா ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், சிறந்த துவக்கம் கிடைக்கும். "மிடில்-ஆர்டரில்' விராத் கோஹ்லி, டிவிலியர்ஸ், சவுரப் திவாரி அதிரடி காட்டும் பட்சத்தில் வலுவான ஸ்கோரை பெறலாம். 

ஜாகிர் நம்பிக்கை:கோல்கட்டாவுக்கு எதிராக வேகப்பந்துவீச்சில் ஆறுதல் அளித்த ஜாகிர் கான், இன்றும் கைகொடுக்கலாம். இவருக்கு வினய் குமார் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம். சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். ஏற்கனவே இவர், சென்னை அணியில் இருந்ததால், வீரர்களின் பலம், பலவீனம் குறித்து நன்கு அறிந்திருப்பார். இவருக்கு கேப்டன் வெட்டோரி கைகொடுக்கும் பட்சத்தில், சென்னை அணிக்கு சிக்கல் தான்.

இதுவரை...ஐ.பி.எல்., அரங்கில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் 12வது முறையாக மோத உள்ளன. முன்னதாக விளையாடிய 11 போட்டியில் சென்னை 6, பெங்களூரு 5 போட்டியில் வெற்றி பெற்றன

இதே நாள்...


  • சர்வதேச விண்வெளி பயண தினம்
  • இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது(2007)
  • ஐக்கிய நாடுகள் கொடி, பிரிட்டனின் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது(1606)
  • ஜிம்பாப்வே டாலர், ஜிம்பாப்வேவின் நாணயமாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது(2009)

தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு குறித்து ஐநா யோசனை!!

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐநாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர் ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன.அதே போல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சில ஆலோசனைகள் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தயாநிதி வழக்கில் முரண்பட்ட நிலை ஏன்? உச்ச நீதிமன்றம்!

"2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனுக்கு எதிராகப் புகார் கூறிவிட்டு, இப்போது அதற்கு முரணாக சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதியது ஏன்?' என்று "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற சமூக அமைப்பை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."2ஜி அலைக்கற்றை' முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ். பணிக்கர் ராதாகிருஷ்ணன் கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.


இந்த வழக்கில் "பொதுநல வழக்கு மையம்' (சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரெஸ்ட் லிட்டிகேஷன்) என்ற அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜர் ஆனார்.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும்' என்று அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அத்துடன், "டெலிகாம் வாட்ச் டாக்' என்ற அமைப்பு சார்பிலும் பத்திரிகையாளர் பரஞ்சாய் குஹா தாகூர்த்தா சார்பிலும் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். இவை தொடர்பான வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜரானார். அவரது வாதம்:இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் ஆஜராகியுள்ள டெலிகாம் வாட்ச் டாக் அமைப்பின் செயலர் அனில் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.


அதில், தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு தயாநிதி நெருக்கடி கொடுத்தார் என்று அனில்குமார் தனது மனுவில் கூறியுள்ளார். ஆனால், அவரே சி.பி.ஐ. அலுவலகத்துக்கு பிப்ரவரி 5ம் தேதி அனுப்பிய கடிதத்தில், அதற்கு முரணான கருத்தைத் தெரிவித்துள்ளார். தயாநிதி மாறனுக்கு எதிராக ஒரு வார இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், உள்நோக்கத்துடன் மாறனுக்கு எதிராக சிவசங்கரன் புகார் கூறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தயாநிதிக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறலாம் என முடிவு செய்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனில் குமார், வழக்கில் சிவசங்கரனையே எதிரியாகச் சேர்க்கலாம் என்பதையும் கூறியுள்ளார்.


ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது, புகார் கொடுத்த நபர் திடீரென்று அதற்கு மாறான கருத்தை எப்படிக் கூறலாம்? இதனால், அனில் குமாரின் நம்பகத் தன்மை மீது சி.பி.ஐ.க்கு சந்தேகம் தோன்றுகிறது'' என்று கே.கே. வேணுகோபால் வாதிட்டார்.அது மட்டுமின்றி, வழக்கில் ஆஜராகும் பிரசாந்த் பூஷண் மேலும் இரு மனு தாரர்களுக்காக வாதாடுகிறார். அவர்கள் கூறும் புகார்களின் நம்பகத் தன்மை குறித்தும் சந்தேகம் எழுகிறது'' என்றார் வேணுகோபால்.இதைக் கேட்ட நீதிபதிகள், இது குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க அனில்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனர்.அனில் குமார் எந்தச் சூழலில் சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதினார் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு முரணாகக் கடிதம் எழுதவேண்டிய நிர்பந்தம் என்ன என்பதையும் அவர் ஒரு வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மறக்கப்பட்ட 1947 மே 31 சம்பவம்!

 வேற்று கிரகங்களில் மனிதர்கள் வசிக்கின்றனர், நம்மைவிட நாகரிகமும் அறிவியல் முன்னேற்றமும் உள்ள அவர்கள் ஓசையே இல்லாத வான ஊர்திகளில் வந்து பூமியில் இறங்கி சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்கின்றனர் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் அடிக்கடி பேசியும் எழுதியும் வருகின்றனர்.ஆனால் திட்டவட்டமான நிரூபணங்கள் இல்லாததால் இவற்றையெல்லாம் கற்பனை என்றோ, கனவுகளின் வெளிப்பாடு என்றோ இதுவரை கூறி வருகிறார்கள்.அதே வேளையில் இது சாத்தியம் இல்லை என்று எவராலும் கூற முடிவதில்லை. இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை.அப்படித்தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒடிசா மாநிலத்துக்கு சில வேற்றுகிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.


ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.வேற்றுகிரகவாசிகள்: ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31-ம் தேதி வந்து இறங்கினர். தீரம் மிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றிவந்தனர். பிறகு அவர்களை அந்த இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.


அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராமவாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ""பட்ட சித்திரக்காரர்'' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு ஓலைச் சுவடியில் சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒடியா வார இதழ் ஒன்று ஜூன் 15-ம் தேதி அச் செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் ""கிராமவாசிகளின் அதீத கற்பனை'' என்ற காட்டமான விமர்சனத்தோடு.இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.


எந்திர புருஷர்கள்: கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுகிரக மனிதர்கள் எந்திர புருஷர்களாக வரையப்பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவோ, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.சிலருடைய கைகள் வட்டவடிவில் பந்து போல உருண்டிருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்தவரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.


இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல் என்ற இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து புரியில் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால், வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் ""முதலில் சந்தித்த'' வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக்கூடும்

7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் 48 மணி நேரம் கெடு!

 தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை 48 மணி நேரத்துக்குள்ளாக சமர்ப்பிக்க வேண்டும் என்று 7 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.அந்தந்த மாநில ஆளுநர்களின் பரிசீலனையில் உள்ள இந்த மனுக்கள் பற்றிய விவரங்களை 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை, சில மாநிலங்கள் கடைபிடிக்காததை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த உத்தரவை பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் நிறைவேற்றவில்லை.மரண தண்டனை அளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரிடம் கருணை மனுக்கள் அனுப்பியுள்ள, அதே நேரத்தில் பல்வேறு காரணங்களால் உச்ச நீதிமன்றத்தை அணுகாத அவர்களது வழக்குகளை ஆராய விரும்புவதாக இருவர் பெஞ்ச் தெரிவித்தது.


"அவர்களது வழக்குகள் ஊடகங்களால் பேசப்படவில்லை.நாட்டிற்கு வெளியில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் பின்னணி கொண்ட வழக்குகளைத்தான் ஊடகங்கள் பேசுகின்றன' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.மரண தண்டனை அளிக்கப்பட்ட வழக்குகளில் காலதாமதம் ஏற்பட்டதற்கு நீதித்துறை எந்த அளவுக்கு பொறுப்பாளியாக உள்ளது என்பதை ஆராய விரும்புவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


18 கருணை மனுக்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு ஏப்ரல் 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற தேவேந்திர பால் சிங் புல்லரின் புகார் மனுவை விசாரித்தபோது இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.தான் சமர்ப்பித்த கருணை மனு தொடர்பாக இறுதி முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் அளவுக்கு அதிகமான காலம் எடுத்துக் கொண்டதாக புல்லர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது ஜெயலலிதா

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான செயல்களில் அதிபர் ராஜபட்ச அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் அந்நாட்டு அரசிடம் எவ்விதமான மாற்றமும் தெரியாததாலும் இலங்கைக்குச் செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது என அவர் கூறியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இலங்கைத் தமிழர்களை மறு குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது, இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஏப்ரல் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. அதில் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதற்கிணங்க அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டை அனுப்ப முடிவு செய்தேன்.


இலங்கையில் வாழும் தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அதிமுக உறுதியாக உள்ளது.இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க ஐ.நா. சபையை இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும், இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை மற்ற நாடுகளுடன் இணைந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தேன்.


இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் கடுமையைக் குறைத்து அதை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெற்று பின் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இருப்பினும் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு இது முதல் படியாக இருக்கும் என்பதால் அதை நான் பாராட்டினேன்.நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்றும் நம்பினேன்.


அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு அவற்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டவும் உதவும் என்ற எண்ணத்தில்தான் அதிமுக சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப சம்மதித்தேன். ஆனால், சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழுவினர் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாதது போல் அமைந்துள்ளது. அதிபர் ராஜபட்ச உள்பட சிங்கள அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள், விருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது ஏதோ சம்பிரதாயத்துக்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது.ஜெனீவாவில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மென்மையான தீர்மானத்தை கூட இலங்கை அதிபர் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை.தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபட்ச அரசு தடுத்து நிறுத்தவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.


தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபட்ச அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் உண்மைகளைப் பற்றி இலங்கை அதிபருடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் சுற்றுப்பயணத்தின் கடைசி நாளில் அதிபர் ராஜபட்சவுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.எனவே, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்றார் ஜெயலலிதா.

10 April, 2012

மாறுமா இந்த கலாச்சாரம்?



ரு மனிதனின் இறப்பை இப்படி பண வரவுடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் மக்களிடம் வந்ததற்கு யார் காரணம்? அரசியல்வாதிகளா அல்லது பொதுமக்களா? நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த சி.பி.ஐ.-க்கு புதுக்கோட்டை தொகுதி கிடைத்தது. தி.மு.க. சார்பில் பெரியண்ணன் அரசு போட்டியிட்டார். கடுமையான போட்டிக்கு இடையிலும் தனது எளிமையான பிரச்சாரம், மக்களிடம் அணுகும் முறை போன்ற காரணங்களால் மக்களிடம் வரவேற்பை பெற்றார் முத்துக்குமரன். பெரிய கட்சிகள் பணத்தை அள்ளித் தெளித்தாலும், தனது எளிமையால் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜெயித்தார்.

ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் தான் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை பெற்றுத்தர முயற்சித்து வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் மக்கள் பிரச்னைகளுக்காக அதிகப்படியான கேள்விகளை கேட்ட உறுப்பினர் என்ற பெருமையை முத்துக்குமரன் பெற்றிருந்தார். இப்படி தனது அரசியல் வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பித்த சில மாதங்களிலே அவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என கேள்விப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட நல்ல மனிதனின் இழப்பு அந்த தொகுதி மக்களுக்கு பேரிழப்பாகும். இவரது இறப்பால் வரப்போகும் இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகள் எவ்வளவு கொடுக்கும் என்ற பேச்சுகள் அந்த தொகுதி மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. 

ஓட்டுக்கு காசு வாங்கும் மக்களின் இந்த மனோபாவத்திற்கு யார் காரணம்? ஆளுங்கட்சி தனது வெற்றியை தக்க வைக்கவும், எதிர்கட்சி தங்களது இருப்பை உறுதிப்படுத்தவும், மற்ற கட்சிகள் தங்கள் வரவை பதிவு செய்யும் தளமாக இடைத்தேர்தலை பார்க்கின்றனர். இதனால் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் அனைத்து அஸ்திரங்களையும் பயன்படுத்தி வெற்றி பெற போராடுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது 'ஓட்டுக்கு பணம்'. எப்படியும் வீட்டுக்கு குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாயாவது கிடைத்துவிடும் என்ற கணக்கை போட ஆரம்பித்துவிடுகின்றனர் பொது மக்கள். இதில் யாரை குறை சொல்வது? பணம் கொடுப்பவரையா? பணம் வாங்குபவரையா?  

முத்துக்குமரன் இறப்பால் வரும் இடைத்தேர்தலுக்கு கிடைப்பது சில ஆயிரங்கள் தான், ஆனால் அவர் உயிருடன் இருந்தால் தனது தொகுதி மக்களுக்காக எத்தனை ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பெற்றுத் தந்திருப்பார் என்பதை மக்கள் யோசித்து பார்த்தால் புரியும்.இனிமேல் சட்டசபை எம்.எல்.ஏ.-கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் போலிருக்கிறது. தங்கள் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவேண்டும் என்பதற்காக தொகுதி மக்கள் எதையும் செய்வார்களோ என்று பயப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மாறுமா இந்த கலாச்சாரம்?

இதே நாள்...


  • சர்வதேச தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)
  •  ஆப்பிள் 1 உருவாக்கப்பட்டது(1976)
  •  விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)
  •  ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)
  •  மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம்(1869)

05 April, 2012

இதே நாள்...

  • பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
  • அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1782)
  • மகாத்மா காந்தி, தண்டி யாத்திரையை நிறைவு செய்தார்(1930)
  • ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)

ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும்!


நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் ருத்திரகுமாரனைக் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.பேசுகையில், நாட்டில் உள்ள சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சீர்குலைத்து குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக வெளிநாட்டிலிருந்து செயற்படும் நாடு கடந்த அரசின் தலைவர் ருத்திரகுமாரனைக் கைது செய்யும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த நாதாரி தெரிவித்துள்ளது!.

04 April, 2012

DECEMBAR POOKAL MOVIE


இதே நாள்...


  • செனிகல் குடியரசு தினம்
  • அங்கோலா அமைதி தினம்
  • உலக வர்த்தக மையம் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது(1973)
  • மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது(1975)
  • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1855)

ஜெனிவா தோல்வியின் எதிரொலியே இலங்கையின் புலிக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு மூன்று முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன எனவும், அவ்வாறு பயிற்சி பெற்ற 150 புலிகள் இலங்கை திரும்பியுள்ளனர் எனவும், புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் வெளியிட்ட செய்தியால் இந்தியா கவலை அடைந்துள்ளது எனப் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவாத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை மனதில் வைத்தே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் செய்தி ஆதாரமற்றது என்றும் முற்றிலும் தவறானது என்றும் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேசமயம் தமிழக போலீஸ் தலைவரும் இதை மறுத்துள்ளார்.


ஆனாலும் இந்தியா மீது திட்டமிட்டே இலங்கை இவ்வாறு பழிசுமத்தியுள்ளதாக தில்லி கருதுகிறது.அந்த செய்தியில் புலனாய்வு அமைப்பை ஆதாரமாக காட்டியுள்ளதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக இந்தியா கருதுகிறது எனவும் தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் இந்தியா இந்த விவகாரத்தை தனியே அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாது என்றும், வெளிவிவகார அமைச்சக மட்டத்தில் இதுபற்றி விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர், இலங்கை இந்தியா இடையிலான உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீரன் சின்னமலைக்கு சங்ககிரியில் நினைவுச் சின்னம்!

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தீரன் சின்னமலைக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:விடுதலைப் போராட்ட வீரர்களையும்; தன்னலமற்ற மக்கள் சேவை புரிந்தவர்களையும்; சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களையும்; மக்களின் உரிமைகளை மீட்க போராட்டங்களை நடத்தியவர்களையும் கௌரவிக்கும் விதத்தில் அவர்களுக்கு மணிமண்டபங்கள் அமைப்பதிலும்; திருவுருவச் சிலைகள் அமைப்பதிலும்; அரசு கட்டடங்களுக்கு அவர்களது பெயர்களை வைப்பதிலும்; முன்னோடியாக விளங்குவது அதிமுக அரசு என்று சொன்னால் அது மிகையாகாது.


பரம்பரை பரம்பரையாய் அடிமைத் தளையில் சிக்குண்ட நம் இந்திய நாடு, தற்போது, உரிமை பெற்ற நாடாக விளங்குகிறது. இச்சுதந்திரத்தைப் பெற இந்திய விடுதலைப் போரில் எண்ணற்ற தியாகச் சீலர்கள், கிளர்ந்து எழுந்து; தங்கள் வாழ்வை துச்சமென மதித்து; அன்னை பாரதத்தின் அடிமைத் தளையை தகர்த்தெறிய பாடுபட்டனர். இத்தகைய விடுதலைப் போரில், தமிழகத்திலும் பல தலைவர்கள் தோன்றி தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த விடுதலைப் போராட்டத்தில், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கியவர் மாவீரர் தீரன் சின்னமலை .சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் புரட்சித் தலைவர் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.


எனது ஆட்சிக் காலத்தில், சென்னை, அண்ணா சாலையில், தீரன் சின்னமலை அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதோடு; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணிக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடையையும் நான் அளித்தேன். 1995 ஆம் ஆண்டு தீரன் சின்னமலை அவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், காங்கேயத்தில், நினைவு விழா நடத்தப்பட்டு; அவ்விழாவில் அவரது வாரிசுகள், கௌரவிக்கப்பட்டனர். எனது ஆட்சிக் காலத்தில் தான், கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கரூரைத் தலைநகராகக் கொண்டு தீரன் சின்னமலை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில், அவரது நினைவு நாளான, ஆடி மாதம் 18-ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க 2003 ஆம் ஆண்டு நான் உத்தரவிட்டேன். தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், 30 லட்சம் ரூபாய் செலவில், ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம், ஓடாநிலையில் மணிமண்டபம் என்னால் 2006 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
தியாகி தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாது என்ற நிலைக்கு வந்த ஆங்கிலேயர், சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து; சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று தூக்கிலிட்டனர்.  மாவீரர் தீரன் சின்னமலையை தூக்கிலிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று, சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர், விஜயலட்சுமி பழனிசாமி 30 மார்ச், 2012, அன்று இந்த மாமன்றத்திலே கோரிக்கை வைத்தார்.


இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக, நன்மைக்காக பாடுபட்ட நல்லோர் அனைவருக்கும் தனது நன்றியறிதலைக் காட்டி வரும் அரசு எங்கள் அரசு. இந்த உணர்வின் அடிப்படையில், உறுப்பினர்  விஜயலட்சுமி பழனிசாமி கோரிக்கையை ஏற்று, மாவீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு அவர் தூக்கிலிடப்பட்ட இடமான, சங்ககிரியில், நினைவுச் சின்னம் விரைவில் அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.எனது தலைமையிலான அரசின் இந்த முடிவை, இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையினைத் தெரிவித்து, இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பார்த்ததில் பிடித்தது !

உங்கள் கண்கள் புதைக்கபடுவதை விட
எங்கள் உடலில் விதைத்துவிடுங்கள்


Pachilankuruthi - Tamil Science Fiction Thriller Short Film


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...