ஹாங்காங் : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் விளைவு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. ஜப்பானில் ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், பசிபிக் கடலில் ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி உருவானது. இந்த சுனாமியின் பீதியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில், இந்த சுனாமியின் பாதிப்பு, ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த சிலநாட்களாகவே, எண்ணெய் வளமிக்க லிபியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சுனாமியும் பாதித்துள்ளது பங்கு முதலீட்டாளர்களை பெரிதும் கலக்கமடைய வைத்துள்ளது. டோக்கியோ பங்குச்சந்தையில், 1.7 சதவீத சரிவும், ஹாங்காங் பங்குச்சந்தையில் 1.8 சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment