வாக்காளர்களை தேர்தல் கமிஷனின் தடைகளை எல்லாம் தகர்த்து கவனிக்க வேண்டும் என துடிக்கிறது கட்சிகள். . வீடு வீடாக சென்று "பூத் சிலிப்' கொடுத்து பிரசாரம் செய்வதற்கும் தடை விதித்தது. இருப்பினும் எப்படியாவது வாக்காளர்களை "கவனிக்க' வேண்டும் என்று கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன. மதுரையில் வீடு வீடாக சென்று, எத்தனை இலவச "டிவி' , காஸ் உள்ளது, அரசின் உயிர் காக்கும் திட்டத்தில் சேர்ந்துள்ளார்களா என்று கணக்கெடுத்ததாக தி.மு.க.,வைச் சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். . மதுரையில் ஒவ்வொரு வீடாக சென்று, வாக்காளர்களின் பெயர், விவரங்கள், இலவச "டிவி', காஸ் உள்ளதா, தங்கள் கட்சிக்கு ஆதரவு தருபவரா? அரசின் உயிர் காக்கும் திட்ட சலுகை பெற்றவரா, இல்லையா, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை பெற்றவரா, வெளியூர்களில் வசித்தால் அந்த முகவரி மற்றும் மொபைல் போன் என்பது உட்பட 14 வகையான விவரங்களை சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம், ஜெய்ஹிந்த்புரத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.காலனியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரத்தில் வீடு வீடாக "லிஸ்ட்' எடுத்துக் கொண்டிருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த சட்டநாதன் (50) சீதாலட்சுமி(30) ஆகியோரை, தேர்தல் விதிமுறை மீறல் கண்காணிப்பு குழு புகாரின் பேரில், கரிமேடு போலீசார் கைது செய்தனர் .
No comments:
Post a Comment