|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 March, 2011

தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்டுகள் வாங்க புதுத்திட்டம்

தபால் நிலையங்களிலும் ரயில்வே டிக்கெட்டுகள் வாங்கும் வசதி துவங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரயி்ல்நிலையங்களில் மட்டுமே கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் இருந்து வருகின்றன. இங்கு கூட்டம் கட்டுக்கடாங்காமல் உள்ளது. அதுவும் பண்டிகை காலங்களில் இரண்டு அல்லது , மூ்ன்று மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குளளாகின்றனர். இந்நிலையில் தபால் நிலையங்களிலும் ரயில்வே டிக்கெட்டுகள் வாங்கும் புதிய திட்டம் விரைவில் துவங்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ்‌ 27 மாநிலங்களில் 38 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு முக்கிய தலைமை தபால் நிலையங்களில் இந்த டிக்கெட் கவுன்டர்கள் துவங்கவுள்ளன.தற்போது பீகார் மாநிலத்தில் பாட்னா, முஷாபர்பூர், நாளந்தா, கயா, சரண், மதுபானி, கிழக்கு சம்ப்ரான், முங்கர், பகல்பூர்,,பன்கா, சிவான், ஜாமூ, புகஸ்வேரி, புருனியா, தர்பங்கா ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து புருனியா மாவட்ட தலைமை தபால் நிலைய வர்த்தக ப்பிரிவு இயக்குனர் அனில் குமார், நிருபர்களிடம் கூறும்போது , தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் முதல்கட்டமாக ரயில்வே முன்பதிவு குறித்து இங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு 15 நாள்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தபால் நிலையங்களி்ல் ரயில் டிக்கெட் வாங்கும் திட்டம் துவங்கிவிடும். பின்னர் நாடுமுழுவதும் கம்ப்யூட்டர் நெட்வொர்க் இணைப்புள்ள 117 தபால் நிலையங்களில் இந்த சேவை மையம் செயல்படும். இதற்காக தனி கவுன்டர்கள் திறக்கப்படவுள்ளது. இந்த சேவையினை வாரத்திற்கு இருமுறை கண்காணிப்பதற்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் நிர்வாகிக்க அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...