பிரான்சில் ஒரோயால் பகுதி தமிழ் கலாச்சார மன்றத்தின் 6ம் ஆண்டு விழா மே 14ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் சங்கத்தின் தலைவர் பாண்டு ரங்கனின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. மங்கையர் மங்கல விளக்கேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மிலன், நத்தாலி பத்மநாபன் ஆகியோரின் பரதநாட்டியம் முதல் நிகழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, சங்க செயலாளர் தனராஜ் ராமச்சந்திரன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவிற்கு 'நீலக்கடல்'ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா தலைமை ஏற்றார். ஒரோயால் நகரத் தந்தை பெர்நார் மோரன், துணை தந்தை மற்றும் கலாச்சார பிரிவை சேர்த்த சில்வி குருஷோ, பாரீஸ் இந்திய தூதரக விசா அமைச்சகத்தின் உயர் அதிகாரி மகேந்தர் சிங் கன்யால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 May, 2011
பிரான்சில் தமிழ் மன்ற 6ம் ஆண்டு விழா மே 14ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
பிரான்சில் ஒரோயால் பகுதி தமிழ் கலாச்சார மன்றத்தின் 6ம் ஆண்டு விழா மே 14ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் சங்கத்தின் தலைவர் பாண்டு ரங்கனின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. மங்கையர் மங்கல விளக்கேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மிலன், நத்தாலி பத்மநாபன் ஆகியோரின் பரதநாட்டியம் முதல் நிகழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, சங்க செயலாளர் தனராஜ் ராமச்சந்திரன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவிற்கு 'நீலக்கடல்'ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா தலைமை ஏற்றார். ஒரோயால் நகரத் தந்தை பெர்நார் மோரன், துணை தந்தை மற்றும் கலாச்சார பிரிவை சேர்த்த சில்வி குருஷோ, பாரீஸ் இந்திய தூதரக விசா அமைச்சகத்தின் உயர் அதிகாரி மகேந்தர் சிங் கன்யால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment