|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 June, 2011

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஐ.நா., அமைப்பால் 1972ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி, சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'காடுகள்-இயற்கைகளில் உங்கள் பணிகள்' என்ற நோக்கத்தோடு இந்தாண்டு இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளுக்கு பெரும் சவாலான பிரச்சனையாக சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்ந்து, மழை குறைகிறது. அண்டார்டிகா, இமயமலை பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது.

பூமியின் நுரையீரல்: பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது. உலகளவில் 160கோடிபேர் வாழ்வாதாரங்களுக்கு, காடுகளை சார்ந்தே வழ்கின்றனர். மேலும் காடுகள் 30 கோடி பேருக்கு வீடாக பயன்படுகிறது. உலகில் 2005ம் ஆண்டு கணக்கின் படி 189 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு காடுகள் மூலம் வியாபாரம் நடந்துள்ளது. பூமியின் நுரையீரல் போல திகழ்கின்றன. உலகளவில் ஆண்டுதோறும் 1 கோடியே 30 லட்சம் எக்டேர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன. இது போர்ச்சுகல் நாட்டின் நிலப்பரப்புக்கு சமம். தண்ணீர் மழைப்பொழிவு, மண்வளம் மற்றும் மனிதர்களைப் போலவே உயிரினங்களின் வாழ்க்கைக்கும் காடுகள் பயனுள்ளதாக உள்ளன. காடுகளால் தான் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. இதன்மூலம் 50 சதவீத தண்ணீர், நகரங்களுக்கு கிடைக்கிறது. புயல், வெள்ளம் மற்றும் தீ ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு காடுகள் வளர்ப்பு அவசியம். காடுகள் வளர்பதின் மூலம் வேலை வாய்ப்பும் பெருகுகிறது.

இந்தாண்டு இந்தியா: ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடு, இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துகிறது. அதன் படி, முதன்முறையாக இந்தாண்டு இந்தியா இத்தினத்தை நடத்துகிறது. மக்கள் தொகையில் 2வது இடத்திலும், பரப்பளவில் 7வது இடத்திலும் நம்நாடு உள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பால் இந்தியா சுற்றுச்சூழல் பாதிப்பு, பெரும் பிரச்சனையாக விளங்குகிறது. கோல்டன்லங்கார் குரங்கு, ராயல் பெங்கால் டைகர் உள்ளிட்ட உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில இந்தியாவில் உள்ளன. 39 ஏக்கர் பரப்பளவில் உள்ள புலிகளை காக்கவும் இந்தியா சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்த ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பதற்கு இந்நாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, அதிகளவில் மரக்கன்று நடுதல், மறுசுழற்சி முறையை கையாளுதல் போண்றவற்றை அனைவரும் பின்பற்ற முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...