|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2011

ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா ...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சிங்கப்பூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல்போன்கள் வர்த்தகத்தில், ஆசிய அளவில், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் போட்டியாக உள்ளதாக அவர் கூறினார். இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முதலிடத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது. மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இமெயில், டேட்டா, ஃபேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்த்தில் இருந்த நோக்கியா நிறுவனம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பி்ப்ரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய தி்ட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, மக்களுக்கு இதற்கு இருக்கும் வ‌ரவேற்பை பொறுத்து, 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...