|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 June, 2011

கனிமொழிக்கு ஜாமின் இல்லை...


2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகியுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி மற்றும் கலைஞர், "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ., கலைஞர், "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமாரை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது. இவர்கள், கடந்த ஒரு மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும், பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் மற்றும் டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இவர்களது கடைசி நம்பிக்கையே இந்த ஜாமின் மனு தான். இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், சி.பி.ஐ., சார்பில் 17ம் தேதி தாக்கலான பதில் மனுவில், "2ஜி' ஊழல் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை கலைத்து விடுவர் என, தெரிவித்தது.

இந்நிலையில், கனிமொழி, சரத்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் முன் நேற்று நடைபெற்றது. சி.பி.ஐ., மற்றும் இரு மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். காலை, 10.30 மணி முதல், மதியம் 12 மணி வரை, வாதம் நடைபெற்றது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்ட பணம் லஞ்ச பணம் தான். இதை, கடனாக கருதமுடியாது. பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பான ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை. எனவே கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் ஜாமின் வழங்கக் கூடாதுஎன்றார். கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "விசாரணைக்காக கோர்ட்டில் தினமும் ஆஜராகி வருகிறோம். ஆதாரங்களை அழித்துவிடுவோம் என கூறுவது பொருந்தாத வாதம். இந்த வழக்கில் நான்கு சாட்சிகள் உள்ளனர். இதில், ஒருவரது வாக்குமூலம் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று சாட்சிகள் உள்ளனர். ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என்ற வாதத்திற்கே இடமில்லை. மனுதாரர்களில் ஒருவரான கனிமொழி, ஒரு குழந்தைக்கு தாய். ஜாமினுக்காக எந்த நிபந்தனை வேண்டுமானாலும் விதியுங்கள்' என்றார்.

மதியம், 12.30 மணிக்கு கோர்ட் மீண்டும் கூடியதும். நீதிபதிகள் சிங்வி, சவுகான் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்கில், சிறப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் முழுமையாக பதிவு செய்யப்படும் வரை மனுதாரர்கள் காத்திருக்க வேண்டும். அதன்பின், சிறப்பு கோர்ட்டிலேயே ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யலாம். தான் பெண் என்பதற்காக, ஜாமின் வழங்க வேண்டும் என கனிமொழி கருதினால், அவரது வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு, 437ன் கீழ், சட்ட நிவாரணம் பெறலாம். குற்றச்சாட்டுகள் தாக்கலான பின், இருவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தால், இந்த வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து பார்க்காமல், புது மனுவாக ஏற்று விசாரிக்கும்படி சிறப்பு கோர்ட்டை கேட்டுக்கொள்கிறோம். எனத் தீர்ப்பில் கூறினர்.

கடைசி வாய்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், வெளியே வருவதற்கான கடைசி வாய்ப்பையும் கனிமொழி இழந்தார். குற்றச்சாட்டுகள், அடுத்த மாதம், இரண்டாம் வாரத்திலிருந்து பதிவு செய்யப்படும் என, தெரிகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், கனிமொழி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் பட்சத்தில், இதன்பின், ஜாமின் மனு தாக்கல் செய்யவேண்டும் என்பதால், கனிமொழி, இன்னும், 45 நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என, சட்ட வல்லுனர்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...