|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 June, 2011

உப்புமா தயாரித்து அமெரிக்க சமையல் போட்டியில் வென்ற இந்தியர்!

உப்புமா என்றவுடன் நம்மில் பலர் முகம் சுளிப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்த உப்புமாதான் அமெரிக்காவில் நடந்த சர்வதேச சமையல் கலைப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசை பெற்றுத் தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? மும்பையை சேர்ந்தவர் கர்டோஸ். இவர் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் சமையல் நிபுணராக பணியாற்றுகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்காவின் தலை சிறந்த சமையல் நிபுணர் போட்டியில் அவர் கலந்து கொண்டார். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் இறுதி சுற்றுக்கு கர்டோஸ் முன்னேறினார்.மிகவும் கடினமான இறுதி சுற்றில் மில்லிகென் என்ற மற்றொரு சமையல் நிபுணரை தோற்கடித்து 'சிறந்த சமையல் நிபுணர்' பட்டத்தை வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்றதால் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் கர்டோஸ் சமைத்த உணவு, ரவா உப்புமா என்பது குறிப்பிடத்தக்கது. ரவை மற்றும் காளான் ஆகியவற்றை கொண்டு அவர் இந்த உப்புமாவை தயாரித்தார்.இனி பேச்சுக்குக் கூட யாரும், உப்புமா பெறாத விஷயம் என்று சொல்லிவிட முடியாது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...