|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 June, 2011

குடமுருட்டி சேகருக்கு 'குண்டாஸ்'!

திமுக மாவட்ட துணைச் செயலாளரும், கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவருமான குடமுருட்டி சேகர் (45) மீது கஞ்சா கடத்தல் வழக்கு, உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய வழக்கு போன்றவை கோட்டை போலீசாரால் பதிவு செய்யப்பட்டன.இந் நிலையில் கடந்த 30ம் தேதி இரவு குடமுருட்டி சேகர் மலைக்கோட்டை எக்ஸ்ரசில் சென்னைக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறி அவரை கோட்டை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந் நிலையில், தேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் ரவிச்சந்திரன், இடப் பிரச்சனை சம்பந்தமாக சரண்யா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சேகர் மீது மேலும் இரு வழக்குகளை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில் ஆய்வாளர் பரவாசுதேவனின் பரிந்துரையின் பேரில் குடமுருட்டி சேகரை குண்டர் சட்டத்தில் அடைக்க கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள சேகர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகாத திமுக எம்.பி. ரித்தீஷ்:இந் நிலையில் தேர்தல் வழக்கு தொடர்பாக முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் இந்த வழக்கில் தொடர்புடைய திமுக எம்.பி. ரி்த்தீஷ் உள்ளிட்ட சிலர் ஆஜரகாவில்லை.

நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கடலாடியில் திமுக கட்சி ஊழியர் கூட்டத்தில், அளவுக்கு அதிகமான வாகனங்களில் திமுகவினர் சென்று பங்கேற்றனர்.இதற்காக, திமுக முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமையில், எம்.பி. ரித்தீஷ், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எ,ல்.ஏ. முருகவேல், தி.மு.க. வேட்பாளர் சத்தியமூர்த்தி, கடலாடி ஒன்றிய தலைவர் ராஜசேகர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் புண்ணியவேல், ஒன்றிய விவசாய அணி செயலாளர் திருக்கண்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மயில்வாகனன், மேலச்செல்வனூர் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 15 பேர் மீது தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், திமுக முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், எம்.எல்.ஏ. வேல்முருகன் உள்பட 10 பேர் முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் கோரினர். இவர்களுக்கு நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவி்ட்டது.  ஆனால், திமுக எம்.பி. ரித்தீஷ் உள்பட ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...