முதுமை என்பதும் மற்றுமொரு குழந்தைப் பருவம்தான் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புரிந்து கொள்வதில்லை. இதன் காரணமாகவே இன்றைக்கு வீட்டில் இருக்கும் மூத்தவர்களை உதாசீனப்படுத்துவது அதிகரித்து வருகிறது.
சத்தமில்லாத வன்முறை: இந்தியாவில் மட்டும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 9 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் பலரும் மகன் மற்றும் மருமகள்களால் சத்தமில்லாமல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மூத்த குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் 41 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உதாசீனத்தால் பாதிப்பு: இந்த வன்முறை சம்பவங்கள் மூத்த குடிமக்களை பெரிதும் பாதித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர் செய்யும் உதாசீனம் அவர்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்துவதும் தெரியவந்துள்ளது. நமக்கும் முதுமை வரும் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து கொண்டு வயதானவர்களின் மீதான வன்முறைப் போக்கினை கைவிட வேண்டும்.முன்பெல்லாம் மாமியார் கொடுமைதான் அதிகம் பேசப்படும். ஆனால் இன்றோ மருமகள்களால் அவதிப்படும், அல்லலுறும், சித்திரவதைக்குள்ளாகும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.
வீட்டில் நிலவும் இப்படிப்பட்ட நிம்மதியில்லாத நிலைமை, அல்லலிருந்து தப்பிக்க விரும்புவது ஆகியவை காரணமாக உறவுகள் எல்லாம் இருந்தும் கூட முதியோர் காப்பகங்களை நாடி வரும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல வீடுகளில், பிள்ளைகளே, தங்களது பெற்றோர்களை காப்பகஙக்ளுக்கு அனுப்பி வைத்து விடும் அவலங்களும் கண் கூடாகி வருகிறது. வயது முதிர்ந்தவர்களுக்காக உதவி புரிவதற்காகவே ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment