தமிழகத்தில் 92 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்-கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
திண்டுக்கல் பி. எஸ். என். ஏ. பொறியியல் கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமை துவக்கி வைத்து, அவர் கூறியதாவது: &' தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2.20 லட்சம் சீட்டுக்கள் உள்ளன. கவுன்சிலிங் மூலம் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு 73 ஆயிரம் சீட்- கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 55 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 92 ஆயிரம் சீட்கள் காலியாக உள்ளன. தற்போது 22 நாட்கள் கவுன்சிலிங் முடிந்துள்ளது. இன்னும்13 நாட்கள் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இது முடிந்த பின்பு 30 ஆயிரம் சீட் எப்படியும் காலியாக இருக்கும். இதனால், துணை கவுன்சிலிங் ஆக., 12 ல் நடக்க உள்ளது.
துணை கவுன்சிலிங்கில் இதுவரை விண்ணப்பிக்காதவரும், பிளஸ் 2 ல் பெயிலாகி, தேர்வானவர்களும் விண்ணப்பிக்கலாம். இ. சி. இ., பிரிவை 46 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து கம்ப்யூட்டர், மெக்கானிக் பிரிவை தேர்வு செய்கின்றனர். இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 22 முதல் துவங்குகிறது
No comments:
Post a Comment