சுதந்திரதினத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்திய தேசிய
கீதத்தில் இருக்கும் "சிந்த்" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு "சிந்து" என்று
மாற்றுமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்
ஸ்ரீகாந்த் மாலுஷ்டே மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பேராசிரியர் ஸ்ரீகாந்த் மாலுஷ்டே தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நமது தேசிய கீதத்தில் உள்ள "சிந்த்" என்ற வார்த்தை கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் "சிந்து" என்று அரசால் மாற்றப்பட்டது. ஆனால் அந்த மாற்றத்தை செயல்படுத்தாமல் தொடர்ந்து தவறாக "சிந்த்" என்று தான் பாடி வருகிறோம். "சிந்த்" என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி. "சிந்து" என்பது இந்தியாவில் ஓடும் நதி. நம் நாட்டில் இரண்டு வேறுபட்ட தேசிய கீதத்தை பாடிவருகிறோம். சிலர் சிந்து என்ற சரியான வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் சிந்த் என்ற தவறான வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றனர்.
எனவே, தேசிய கீதத்தில் உள்ள சிந்த் என்ற வார்த்தையை நீக்கி விட்டு சிந்து என்ற வார்த்தையை சேர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment