வலிமையற்ற லோக்பால் மசோதாவுக்கு எதிராக அண்ணா ஹசாரே பைக் பேரணியில் கலந்துகொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்.
வலிமையற்ற லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வலிமையான லோக்பால் மசோதா குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் மும்பை தாதரில் இருந்து ஆசாத் மைதான் வரை இன்று பைக் பேரணி மேற்கொண்டார் அண்ணா ஹசாரே.
அண்ணா ஹசாரே மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் ஒரு திறந்த ஜீப்பில் கிழக்கு தாதரில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் இருந்து இந்தப் பேரணியைத் துவக்கினர்.
தானே உள்ளிட்ட இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த சமூகத் தொண்டர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். தேசபக்திப் பாடல்களைப் பாடியும், லோக்பால் பில் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை வலியுறுத்தியும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியதாக ஊழலுக்கு எதிரான அமைப்பின் தொண்டர் ப்ரபுல் வோரா கூறினார்.
ஆசாத் மைதானத்தில் இன்று மாலை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் அண்ணா ஹஸாரே கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். மேலும், ஆசாத் மைதானில் இருந்து ஆகஸ்ட் க்ரந்தி மைதான் வரை ஒரு மாபெரும் பேரணிக்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் அண்ணா ஹஸாரே ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறினார் வோரா. மேலும், கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ஊழலுக்கு எதிரான அமைப்பின் பெயரில் ஒரு தகவல் மையம் மும்பையில் ஏற்படுத்தப்பட்டது என்றும், இந்தப் பேரணி குறித்து தகவல்களை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் பேசி கேட்டறிந்தனர் என்றும் வோரா கூறினார்.

No comments:
Post a Comment