|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 August, 2011

தமிழகத்தைப் போல நாங்களும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்கலாமா?- உமர் அப்துல்லா!

தமிழக சட்டசபையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையாக தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது போல ஜம்மு காஷ்மீர் சட்டசபையிலும் தீர்மானம் போட்டு அப்சல் குருவை விடுவிக்க கோரலாமா என்று கேட்டுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உமர் அப்துல்லா ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ள தகவல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.

உமர் அப்துல்லா தனது ட்விட்டர் செய்தியில், தமிழகத்தில் ஒரு தீ்ர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையைக் குறைக்கக் கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்துள்ளார் உமர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதேசமயம், பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக கூறுகையில், அப்சல் குருவின் செயலை ஆதரிப்பது போல உமர் அப்துல்லாவின் செய்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் தர வேண்டும். அவரது பேச்சு அதிர்ச்சியும், வியப்பும் தருகிறது என்று கூறியுள்ளது அக்கட்சி.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...