பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் தகுதி பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் கே.ஏ. அண்ணாமலை (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் சார்பில் 2011ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1055 மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1077 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்மாறிய கிறிஸ்தவ மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் தகுதி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ரூ
.1500 வீதம் தொடர்கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். தொடர்கல்வி சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி நிலையத்தில் படிப்பவராக இருக்க வேண்டும். மதிப்பெண் மற்றும் சாதிச் சான்றிதா நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து
கல்வி நிலைய தலைவரின் முகப்புக் கடிதத்துடன் சென்னை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு
அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment