ஊழக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டம் காரணமாக உத்திரப்பிரதேச தலைநகர்
லக்னோவில் கதர் துணி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. குல்லா, கதர்
துணிகள், கையில் கட்டிக்கொள்ளும் கதர் துண்டுகள் மற்றும் போஸ்டர்கள்
ஏராளமாக தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றது. பக்கத்து
மாநிலங்களுக்கும் இந்த கதர் துணிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அன்னா ஹசாரே
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய 3 நாட்களில் 20,000க்கும் மேற்பட்ட
கொடிகள், 5 ஆயிரம் குல்லாக்களும், ஹசாரே உருவம் பொறித்த போஸ்டர்களும்,
பேட்ஜுகளும், முகமூடிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக சுதந்திர தின விழாவின்போது விற்கப்படுவதை காட்டிலும் 100 மடங்கு விற்பனை அதிகரித்து இருப்பதாக ராஜேஷ் அகர்வால் என்கிற மொத்த வியாபாரி தெரிவித்துள்ளார்.பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரகாண்டம், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் இதுபோன்ற கதர் துணிகள் ஏராளமாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரித்துள்ளார். இந்திய தேசிய கொடிகளை அரசு அங்கீகாரம் பெற்ற கடைக்காரர்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆனால் அன்னா ஹசாரேவின் போராட்டம் காரணமாக எல்லா கடைக்காரர்களுமே தேசிய கொடிகளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். மக்கள் மத்தியில் இந்திய தேசிய கொடிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment