இந்நிலையை மருத்துவர்கள் மாற்ற வேண்டும். அனைத்து மருத்துவ மனைகளிலும்
உள்நோயாளி கள் பிரிவில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்றால் தான் உணவு
மற்றும் மருந்துகள் சரியான நேரத்தில் எடுத்து கொள்வதுடன் நோயாளிகள் ஓய்வு
எடுக்கவும் ஏதுவாக விளங்கும்.
மதுரை மாவட்டத்திலுள்ள
அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மாதாந்திர
ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் மாவட்ட
கலெக்டர் சகாயம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
கலெக்டர் சகாயம், ’’பொதுவாக கிராமப் புறங்களில் வளர்ச்சிப் பணிகள்
ஆய்வுக்கு சென்ற பொழுது பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்
உள்நோயாளிகள் பிரிவு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் நிலை இல்லை.
அப்பொழுது தான் சிறிய நோயை விரைவில்
குணப்படுத்தி பெரிய நோய் வராமல் தடுக்க முடியும். எனவே உள்நோயாளிகள்
பிரிவுக்கு மருத்துவர்கள் முக்கியத்துவம் தரவேண்டும். மதுரை
மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் கருவிகள், உபகரணங்கள், கட்டிடங்கள்
தேவையான அளவு உள்ளன. மேலும் மருத்துவமனைகளுக்கு தேவையான கருவிகளை வழங்க
மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
தேவையான உபகரணங்களை
மருத்துவர்கள் கேட்டு பெற்று கொள்ளலாம். அதேபோன்று காலி பணியிடங்களை நிரப்ப
வும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மருத்துவ வசதி அனைத்து தரப்பட்ட
மக்களுக்கும் கிடைக்க மருத்துவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
மருத்துவர்கள்
தமக்கு ஒதுக்கப்பட்ட இலக்கீடுகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்.
நமது அறிவு சமூகத்திற்கு பயன் படக்கூடிய வகையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள்
முடிந்த அளவு அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாக பிரசவம் பார்க்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு அரசு
மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படும்.
மதுரை மாவட்டத்தில் அரசு
மருத்துவமனைகள் முன் மாதிரி மருத்துவமனையாக திகழ வேண்டும். கிராம மற்றும்
ஊரகப் பகுதியில் மருத்துவ சேவையை பரவலாக்குவது மற்றும் தரமானதாக வழங்கு வதே
தமிழக அரசின் நோக்கமாகும். எனவே மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
உள்ள குடியிருப்புகளில் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகை தர வேண்டும்.பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவர்கள்
மற்ற அலுவலர்களுக்கு முன் மாதிரியானவர்களாக திகழ வேண்டும். கிராமங்களில்
அதிகமான அளவில் காசநோய் குறித்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
அதேபோன்று எச்.ஐ.வி. நோயாளிகள் சரியான முறையில் தொடர்ந்து சிகிச்சை
எடுக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார
நிலையங்களிலேயே முடிந்த வரை அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கொடுத்து
விட்டால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் வருவதை ஆரம்ப
கட்டத்திலேயே தடுத்துவிடலாம் என்பதை உணர்ந்து நாம் இலக்கு அலுவலராக
இல்லாமல் லட்சிய அலுவலர்களாக திகழ வேண்டும்’’ என்று பேசினார்.இக்கூட்டத்தில் கலெக்டர் சகாயம், ’’பொதுவாக கிராமப் புறங்களில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக்கு சென்ற பொழுது பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகள் பிரிவு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் நிலை இல்லை.
No comments:
Post a Comment