|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

இனிய தாம்பத்யத்திற்கு இயற்கை மூலிகைகள்!

இல்லறத்தில் இனிய தாம்யத்தை விரும்புபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொண்டால் இதமான தாம்பத்யத்தை அனுபவிக்கலாம் என்று மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.

உணவியல்துறை வல்லுநர்கள் ஆய்வு; ஜின்செங் மற்றும் குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடலை உற்சாகம் மூட்டும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிவப்பு ஒயின், மற்றும் சாக்லேட்டும் கூட தாம்பத்யத்தின் இனிமையை கூடுதலாக்கும் என்று குல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவியல்துறை பேராசிரியர் மாஸிமோ மார்க்கோன் தனது மாணவர் ஜான்மிலின்க் உடன் இணைந்து ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். அவர்களது ஆய்வு முடிவுகள் உலக உணவு ஆய்வியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள் உங்களுக்காக.

பக்கவிளைவு ஏற்படுவதில்லை: தாம்பத்யத்தில் சரியான ஈடுபாடு இல்லையென்றால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே இயற்கையான ஜின்செங், குங்குமப்பூ, யோகிம்பைன் போன்ற மருந்துகளை கண்டறிந்துள்ளனர். ஜின்செங் என்பது சீனாவில் பயிரிடப்படும் வேர்ச்செடி, யோகிம்பீ என்பது மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் மரமாகும். இவற்றை உட்கொள்வதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கிறது என்று ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இதேபோல் சாக்லேட்டும் உறவின் போது உற்சாகத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.

இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், உணவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு உற்சாகமூட்டுகின்றன. ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்கிறார் மிலின்க்.

போதை தேவையில்லை: ஆனால் நீடித்த இன்பத்திற்காக தற்போது விற்பனை செய்யப்படும் வயாக்ரா உள்ளிட்ட மாத்திரைகளை உபயோகிக்கின்றனர். இதனால் உடல்வலி, தலைவலி உள்ளிட்ட ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் மிலின்க். போதை மருந்து ஆல்கஹால் போன்றவை உறவின் போது உற்சாகத்தை தரலாம் ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...