|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 September, 2011

ஆண்மையை அதிகரிக்கும் ஜின்செங்!

தினம் தினம் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துப் போய் இருப்பவர்களுக்கு உடனடியாக உற்சாகம் தரும் உணவுகளை உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாகவும் சாப்பிடவேண்டும் அதே சமயம் உடலுக்கு உற்சாகம் தருவதாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த உணவுகள் நிச்சயம் பிடிக்கும்.

ஹார்மோன்களுக்கு சீஸ்; சீஸ் எனப்படும் பால் பொருள் அதிக சத்து நிறைந்தது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், தைராமின் ஆகியவை ஹார்மோன்களுக்கு ஊக்கமளித்து உடலை உற்சாகப்படுத்தும். சிறிதளவு சாப்பிட்டாலே போதும். அதிக அளவு சீஸ் சாப்பிட்டால் கொழுப்பு அதிகமாகிவிடும். சீஸ் சாப்பிடும் முன் விழிப்புணர்வு தேவை.

ஆண்டிஆக்ஸிடென்டல் ஸ்ட்ராபெரிஸ்: ஸ்ட்ராபெரிஸ் பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, மங்கனீசியம், போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் காணப்படுகின்றன. நாளொன்றுக்கு 8 நடுத்தர ஸ்ராபெரிஸ் சாப்பிட்டால் நார்ச்சத்தும், வைட்டமின் சி சத்தும் கிடைக்கும். இதிலுள்ள ஆண்டிஆக்டிடென்டல் உடலில் பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பித்து உடனடியாக உற்சாகத்தை தரும். சோர்வை உண்டாக்கும் நோய்கிருமிகளை எதிர்த்து போராடும்.

உடனடி உற்சாகம்; அருகம்புல் ஜூஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை உடனடியாக அளிக்க வல்லது. ஒருடம்ளர் அருகம்புல் ஜூஸ் குடிப்பது 25 கப் காய்கறிகளை உண்பதற்கு சமம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உடனடி உற்சாகத்தை விரும்பும் ஏராளமானோர் அருகம்புல் ஜூஸ் குடிக்கின்றனர். குளோராபில்ஸ், தாதுஉப்புக்கள், ஏ, பி காம்ளக்ஸ், சி, ஈ கே போன்ற வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன. இரத்தத்திற்குத் தேவையான புரதம், 17 வகையான அமினோ அமிலங்கள் இதில் காணப்படுகின்றன.

ஆண்மையை அதிகரிக்கும் ஜின்செங்: சீனாவில் வளர்க்கப்படும் ஜின்செங் செடியின் வேர் உடலுக்கு தேவையான சக்தினையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த வேரினை டீ, காபியில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புகளை பலப்படுத்தி உற்சாகமூட்டும். ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...