இந்தியாவில்
முதல்முறையாக நடைபெறவுள்ள இண்டியன் கிராண்ட் பிரீ ஃபார்முலா 1 கார்
பந்தயத்தைக் காண சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா
1 உரிமையாளர் பெர்னி எக்லிஸ்டன், சச்சினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சச்சினும் கார் பந்தயங்களில் ஆர்வம் உள்ளவர். இந்தியாவில் ஃபார்முலா 1
போட்டிகளை நடத்த வேண்டுமென்று 2004-ம் ஆண்டிலேயே விருப்பம்
தெரிவித்திருந்தார். இந்நிலையில் தில்லி அருகே நொய்டாவில் வரும்
30-ம் தேதி ஃபார்முலா 1 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியாவில் முதல்முறையாக
நடைபெறும் இப்போட்டி விளையாட்டு வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகவும்
கருதப்படுகிறது. இது தொடர்பாக சச்சின் கூறியிருப்பது: இந்தியாவில்
ஃபார்முலா 1 கார் பந்தயம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.
நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஃபார்முலா 1 உரிமையாளர் பெர்னி,
இந்தியாவில் நடைபெறும் போட்டியைக் காண எனக்கு அழைப்பு விடுத்தார். இதுவரை
டி.வி.யிலும், வெளிநாடுகளிலும் சென்றுதான் பெருமளவில் இந்த கார்
பந்தயங்களை ரசித்து வந்தேன். இப்போது நமது நாட்டிலேயே இப்போட்டியைக் காண
வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment