தேர்தல்
விதிமுறைகளில் மக்கள் பிரதிநிதிகளை நிராகரிக்கும் உரிமையையோ அல்லது திரும்
அழைக்கும் உரிமையையோ சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எடுபடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நிராகரிக்கும்
உரிமையை அறிமுகப்படுத்தம் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத்
தேர்தல் ஆணையர், இந்த உரிமையை விதிமுறைகளில் சேர்ப்பது தொடர்ச்சியான
தேர்தல்களுக்கு வழிவகுக்கும் என்றார்.எனினும் வாக்காளர்கள்
நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தில் கோடிக்கணக்கில் செலவழிப்பதற்கு
வேட்பாளர்கள் தயங்குவார்கள். இதனால் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்த
முடியும் என அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளது குறித்து விவாதம் நடத்தத் தயார்
என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment