தேர்தல்களில் ஒதுக்கீடு செய்து மக்களை ஏன் பிரிக்கிறார்கள்? 'என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்புத்தூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது,
விஜயகாந்த் பேசியதாவது:""ஜாதி சாப்பாடு போடாது. உங்கள் மூச்சில் என்ன
ஜாதியா வருகிறது? எல்லோரும் ஒன்றாக இருந்து தானே என் பேச்சுக்
கேட்கிறீர்கள். இந்த தனி,பொது என்பதெல்லாம் தேவையில்லாதது. நீங்களாக மக்களை
பிரிக்காதீர்கள். யார் பிரிக்க சொன்னது? நான்
மனசாட்சிப்படிபேசுகிறேன்.யாரும் பிறக்கையிலேயே இந்த ஜாதி வேண்டும் என்று
கேட்பதில்லை. இது வரை ஜெயித்தவர்கள் எல்லாம்நல்லது செய்திருந்தால் என்
பேச்சை ஏன் கேட்க வரப் போகிறீர்கள். எனக்கும் ஒரு வாய்ப்தைத் தாருங்கள்
என்று கெஞ்சிக் கேட்கிறேன். என் கட்சியினர் வெற்றி பெற்றால் நல்லது
செய்யும் வரை அவர்களை விடமாட்டேன். "ஞாபக மறதி' என்று கூறும் சிதம்பரம்
காங்., கட்சியைக் காட்டிக் கொடுக்கிறாரா?இவ்வாறு விஜயகாந்த்.
No comments:
Post a Comment