பாலஸ்தீனத்தில் ஒரு சிறுமியை 10 ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்து துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். பாலஸ்தீனம் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா என்ற பகுதியை சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர் . இவர் தனது மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டதை அடுத்து தனது மகளாக பாரா மெல்கமை தன்னோடு வைத்து கொண்டார். எனவே இந்த பெண்ணை வெளியே விடாமல் ஒரு சிறிய பாத்ரூமுக்குள் அடைத்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 11. இரவு நேரத்தில் மட்டும் பாத்ரூமில் இருந்து வெளியே வர அனுமதிப்பார். ஆனாலும் வீட்டை விட்டு வெளியே போக முடியாது. இந்த தகவல்எப்படியோ 10 ஆண்டுகள் கழித்து போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அந்த வீட்டில் சோதனையிட்டு பாராவை மீட்டனர். இது குறித்து பாரா கூறுகையில் : நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. எனது அப்பா எனது முடியை அகற்றி விடுவார். அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது . இனிமேல் தான் என் வாழ்க்கை துவங்குகிறது, எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன் . அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான் வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை . அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார் கண்ணீர் மல்க.
No comments:
Post a Comment