தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில், மத்திய அரசு தாமதத்துடன் நடந்துகொள்கிறது என்றும், விளைவுகள் விபரீதமாகும் முன்னர் தாமதமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில்...இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டதாக வருகின்ற செய்திகள் - மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் இலங்கை சென்று அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்றும், இனி தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது என்றும் உறுதியளித்து விட்டு, திரும்பியுள்ள சூழ்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும், தமிழக மீனவர்களைக் கொடுமையாகத் தாக்கி, அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும். அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் கூறுவதும் அப்படி அவர் சொன்ன வாசகங்கள் கடல் காற்றிலேயே கரைந்து போவதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்ற காரணத்தால், இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு உடனடியாக இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும், தாமதிக்காமல் தலையிட வேண்டும். தாமதத்தையும்பொறுத்துக் கொண்டு தமிழக மீனவர்கள் சிங்களவர்களால் மற்றும் சிங்கள ராணுவத்தினரால் தாக்கப்படுகின்ற கொடுமையைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்று எச்சரிக்கின்றேன்.- இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி எச்சரிக்கை
No comments:
Post a Comment