இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக் கழகம், 2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தில் அமைக்கப்படவுள்ளது.அரசு-தனியார் பங்களிப்புடன், இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலை கழகம் ஐதராபாத்தில் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யஷ் பிர்லா குரூப்புக்கும், ஆந்திர மாநில அரசுக்கும் இடையே, இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
2,000 கோடி ரூபாய் செலவில், ஐதராபாத்தின் புறநகர் பகுதியில் இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது.இதுகுறித்து யஷ் பிர்லா குரூப் தலைவர் யஷ் பிர்லா கூறியதாவது: இந்தியாவில் உள்ள பெற்றோர், தங்கள் மகன் அல்லது மகள், இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளை விளையாட்டு தொடர்பான கல்வியை கற்பிக்க வைக்கின்றனர்.
இதனால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அவர்களால் சாதிக்க முடிகிறது. நம்மால் சாதிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தை மாற்றும் வகையிலும், விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த பல்கலை கழகம் அமைக்கப்படவுள்ளது. அனைத்து விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளும், ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் அளவுக்கு, இந்த பல்கலைகலையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் படும்.விளையாட்டு பல்கலையை தொடர்ந்து, ஆயூர்வேத மருத்துவ வசதியுடைய கிராமத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும், எங்கள் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது
No comments:
Post a Comment