அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள பைரசி தடுப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை விக்கிபீடியா இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச இணையதளங்களை தணிக்கை செய்ய புதிய மென்பொருட்களை கொண்டுவருவது இணையதளத்தில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்வது போன்றதாகும். 1800 விக்கிபீடியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் பெரும்பாலானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இந்த சட்டம் இணையதள சுதந்திரத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என விக்கிபீடியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment