கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா நேரு
விளையாட்டு அரங்கம் அருகில் அமைத்துள்ளது, இங்கு மான், மயில், குரங்கு
பாம்பு மற்றும் பல்வேறுவிதமான உயிரினங்கள் கூண்டுக்ளில்
அடைக்கப்பட்டுள்ளது. இதில் நாகபாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், மலைப்பாம்புகள் என பல்வேறு வகையான பாம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஐந்து வயது உடைய ஓரு நாக பாம்புக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் ஒரு “கட்டி” ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து
அந்த “கட்டி” வளர்ந்து கொண்டே வந்தது, இதனால் அந்த நாக பாம்புக்கு உணவு
உண்பதிலும், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதை கவனித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களிடம் காட்டியதில் இது புற்றுநோயாக இருக்கும் என்று சந்தேகம் கொண்டனர். இதை தொடர்ந்து
பாம்பின் உடம்பில் வளர்ந்து வந்த அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற
வன உயிரியல் பூங்கா இயக்குனர் மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவர்கள்
குழு கடந்த 14- தேதி நாக பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மயக்க
மருந்து மூலம், மயக்கமடைய செய்த மருத்துவர்கள் குழுவினர் ஒரு மணிநேரம்
அறுவை சிகிச்சை செய்து பாம்பின் வயிற்றிலிருந்த நூறு கிராம் எடையுள்ள
புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment