நம் புராண
இதிகாசங்களில் பூமிக்கு ப்ருத்வி என்னும் பெயர் கூறப்பட்டிருக்கிறது.
இந்தப் பெயர் வந்ததற்கும் முதல் உழவனுக்கும் தொடர்பு உண்டு ரீமத்
பாகவதத்தில் வேனன் என்ற அரசனைப் பற்றி பேசப்படுகிறது. வேனன் மிகக்
கொடூரமானவனாக இருந்தான். அவனது கொடுங்கோன்மை தாளாத மக்கள் ஒன்று திரண்டு
அவனைக் கொன்றனர். அந்நேரம் இறைவன் அசரீரி வாக்காகக் கூறியதை வைத்து வேனனின்
தொடையைக் கடைந்தனர். அப்போது விஷ்ணுவின் அம்சமாக ப்ருது தோன்றினார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் ப்ருதுவை அரியணையில் அமர்த்தினர். வறண்ட
பூமி, நீர்ப் பற்றாக்குறை, பஞ்சம் ஆகியவற்றால் மக்கள் மிகவும் அவதிப்பட்ட
மக்கள், தங்கள் குறைகளைத் தீர்க்குமாறு ப்ருதுவிடம் வேண்டினர். புராண, வேத,
இதிகாசங்களில் சொல்லப்பட்டது என்னவென்றால், அப்போது, நிலம் உழப்படாமலேயே
பலவித உணவுப் பயிர்களை உற்பத்தி செய்தது. ஆனால், அதுவும் வேனனின் ஆட்சியில்
தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில்,
மக்களின் பசியைப் போக்க ப்ருது மன்னர் பூமியை வேண்டினார். "வில்லின்
நுனியால் என்னை உழுது சமன் படுத்து. பாறைகளை உடைத்து, நீர்ப்
பாய்ச்சலுக்குத் தடையாக இருக்கும் குன்றுகளை வில்லின் உதவியால் நிமிர்த்து
ஸரஸ்வதி நதியின் நீர் பெருகிப் பாயும்'' என்று பூமித்தாய் அறிவுரை
நல்கினார். ப்ருது
நிலத்தை உழுதான். பயிர்கள் செழித்து வளர்ந்தன. முதலில் விளைந்த பயிர்களை
இந்திரனுக்கு அர்ப்பணம் செய்து வேத மந்திரங்களால் தேவதைகளை அழைத்து
அவர்களுக்கு உண்டான ஹவிஸ்ûஸ அளித்தான். உடனே, மழை பொழிய ஆரம்பித்தது. எனவே,
உழவுத் தொழிலின் தந்தை, முதல் உழவன் ப்ருதுவே என நம் நாட்டின் பாரம்பரிய
நூலில் இருந்து அறிகிறோம். இதனாலேயே பூமிக்கு ப்ருத்வி என்ற பெயர்
வழங்கப்பட்டது.
ப்ருதுவின்
தோற்றம் ஏற்படும்வரை, உழவுத் தொழிலை அறியாத அக்கால மக்கள், காடுகளை
எரித்து சாம்பலை மணற் பரப்பில் தூவி விடுவார்கள். பருவம் வந்ததும் வேண்டிய
விதைகளைத் தெளிப்பார்கள். பின் சாகுபடி செய்து பழம், கிழங்குகளை உண்டு
வந்ததாக வேதங்கள் கூறுகின்றன. ஆனால்
அதிக நீர்த் தேக்கத்தாலும், நீர்ப் பற்றாக்குறையாலும் பயிர்கள் நன்கு
விளையவில்லை. பெரும் பாறைகளும், கரடுமுரடான நிலமும், குன்றுகளும்
மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடை செய்து கொண்டிருந்தன. ப்ருதுதான் தன்
முயற்சியினாலும், பகவானின் அருளாலும் வில்லையே கலப்பையாகக் கொண்டு உழுது
நிலத்தை சமன் செய்து பயிர் செழித்து வளர வழிகள் கண்டு பிடித்தான்.
No comments:
Post a Comment