இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடைபெறுகிறது. ஐநாவின் மனித உரிமை ஆணையக்கூட்டம் சுவிஷ் நாட்டின் ஜெனீவா நகரில் நடக்கிறது. மனித உரிமை ஆணையக்கூட்டத்தில், அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ, இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி பேசினார். அவர், மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை அரசு ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். காலம்ஓடிக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கருத்து தெரிவித்தார்.
ஐநா மனித உரிமை ஆணைய நவிபிள்ளை, இலங்கை பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்தார். அவர், இலங்கை அரசு நியமித்த கமிஷன் அறிக்கை மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது. எனினும் கமிஷனின் பரிந்துரைகளை இலங்கை உடனேநிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்.இலங்கையின் மனித உரிமை மீறல் பற்றி மனித உரிமை மன்றத்தில் எகிப்து கருத்து தெரிவித்தது. அணி சாரா நாடுகள் அமைப்பு சார்பில் எகிப்து நாடு இலஙகி பற்றி பேசியது. இலங்கை தாம் நியமித்த கமிஷன் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எகிப்து கூறியது. இலங்கை நடவடிக்கை எடுக்கும் வரை ஐநா தலையிடக் கூடாது என்றும் எகிப்து கருத்து தெரிவித்தது. எகிப்து தெரிவித்த கருத்து இலங்கைக்கு ஆதரவானது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்து இடம் பெற்றுள்ள அணி சாரா நாடு அமைப்பில்தான் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment