ஒரு நாட்டில் பிறந்து மற்றொரு நாட்டில் வாழும் குடியேற்ற மக்கள் அதிகம் வாழும் பட்டியலில் உலக அரங்கில் இந்தியா 9 வது இடத்தை பிடித்துள்ளது. சமீப காலமாக இந்த மக்கள் ஒரளவு கணிசமாக குறைந்து வந்தாலும் , டாப் 10 பட்டியலில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று குடியேறும் உலக குடிபெயர்வோர் கணக்கு விவரத்தில் இந்தியா 4 வது இடத்தில் இருக்கிறது . அமெரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான மக்கள் தொகை டிவிஷன் தரப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா வில் குடியேறும் மக்கள் தொகை கடந்த 7.5 மில்லியன் மக்கள் கடந்த 1990 ல் வசித்து வந்தனர். 2000 ஆயிரமாவது ஆண்டில் 6. 4 மில்லியனாக குறைந்தது. நாடு வாரியாக எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற பட்டியல் கிடைக்காவிட்டா<லும் . 2001 சென்சஸ் படி தெற்காசிய மக்கள் தான் அதிகம் இந்தியாவில் குடியேறுகின்றனர். இதில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மும்பையிலும், பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பெங்களூரிலும் அதிகம் வசிக்கின்றனர்.
வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் 3 மில்லியன், வங்க தேசத்தில் இருந்து பலர் ரிக்க்ஷா தொழிலாளிகளாக கிழக்கு டில்லியில் குடியேறுகின்றனர். ஆனால் இதில் பலர் முறையான ஆவணங்கள் இருப்பதில்லை. பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஒரு மில்லியன், நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் 6 லட்சம் அடங்குவர். அமெரிக்கா குடியேற்றம் , குடிபெயர்தல் உள்ளிட்ட விஷயங்களில் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறதாம் !
No comments:
Post a Comment