காச நோய் பரவுதலும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி உலக காச நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இதனால் நுரையீரல், மூளை, கிட்னி, முதுகெலும்பு பாதிக்கப்படுகிறது. அறிகுறி: தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை இதன் அறிகுறிகள். நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது. ஆண்டுதோறும் 90 லட்சம் பேருக்கு காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். உலக சுகாதார நிறுவனம் "காச நோயைத் தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.
ஆசியாவில் அதிகம்: காசநோயின் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் நாடுகளில் குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகம். இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம்.
சிகிச்சை: துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது, நீண்ட கால சிகிச்சை ஆகியவை இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை. காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு, காச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment