இந்தியாவின் மக்கள் தொகைக்கேற்ப, வருமான வரி செலுத்துவோர் மிகவும் குறைவு,'' என நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரிய உறுப்பினர் சுதா ஷர்மா தெரிவித்தார். மதுரை வருமான வரி அலுவலகத்தில், "ஆன்லைன்' மூலம் சேவை மையத்தை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: இந்தியாவில் 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருந்தாலும், 3.6 கோடி பேர் தான், வருமான வரி செலுத்துகின்றனர். அதிலும் நிறைய பேர் வரி செலுத்துவதில்லை. நேர்மையாகவும் செலுத்துவதில்லை. தற்போது வருமான வரி செலுத்துவதற்கு நிறைய நடைமுறைகள் இருப்பதால், தொல்லையாக இருப்பது போல தோன்றும். எனவே வரி செலுத்துவோர்களை அதிகம் கஷ்டப்படுத்தாமல், மரியாதை செய்யும் வகையில்,"ஆன் லைன்' மூலம் சேவை மையத்தை துவக்கியுள்ளோம். இத்தகைய வசதிகளின் மூலம் வரிசெலுத்துவோரை தக்க வைக்க முடியும், என்றார். வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் தாஸ் ஷர்மா பேசுகையில்,""ஒன்பது மாவட்டங்கள் அடங்கிய மதுரை மண்டலத்தில் ரூ.1580 கோடி வரி வசூலாகியுள்ளது. ஐந்து லட்சம் பேர் வரிசெலுத்துகின்றனர். தேசியளவில் நிகர வளர்ச்சி 10 சதவீதம், ஆனால் 13.5 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளோம். கடுமையான மின்வெட்டு பிரச்னையால் ஜவுளித்துறை உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. துறைக்கு செலுத்தும் வரியும் குறைந்துவிட்டது,'' என்றார்.
No comments:
Post a Comment