விழுப்புரம் மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (27). இவர் ஓடும் பேருந்துகளில் நூதன முறையில் கொள்ளையடித்து வந்திருக்கிறார். தன்னிடம் உள்ள பஜாஜ் ஸ்கூட்டரில் பேருந்தை ஒட்டியது போல ஓட்டி செல்வார். அப்போது இவரால் அனுப்பப்பட்ட இவருடைய கள்ளக்காதலி பேருந்தின் இருந்தப்படி பயணிகளிடம் இருந்த பறித்த தங்கச் சங்கிலிகளை ஜன்னல் வழியாக வெளியே வீசுவார். அதை லாகவமாக கேட்சி பிடித்துக்கொண்டு தட்சணா மூர்த்தி தப்பித்துவிடுவார்.
மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண் விஜயா, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாலா இன்னும் சில பெண்களை இதற்காக இவரும, இவருடைய நண்பர் சீனுவும் பயன்படுத்தி சங்கிலி பறிப்பு செய்து வந்திருக்கின்றனர். கீழ்ப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கே.ராஜாராம் தலைமையிலான போலீசார் இன்று காலை இந்த கூட்டணியை பின்தொடர்ந்தபடி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகள், பஜாஜ் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
தட்சணாமூர்த்தி, விஜயா, மாலா ஆகியோர் போலீசில் சிக்கினர். கூட்டாளி சீனு தலைமறைவாகிவிட்டார். கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா, மாலதி, சித்ரா, உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இவர்களின் கைவரிசையில் தங்கள் நகைகளை பறிகொடுதது போலீசுக்கு புகார் மனு கொடுத்துள்ளனர். தட்சணாமுர்த்தியை பொறுத்தவரை கோயம்பேடு, பாரிமுனை, வடபழனி ஆகிய பேருந்துநிலையங்களைத்தான் குறிவைத்து செயல்பட்டு வந்திருக்கிறார். பேருந்தில் நகை பறிப்பில் செயல்படுவதற்கென்றே இவருக்காக 5 காதலிகள் பணியில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment