மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயியான கஜானந்த் கோத்தீகர் என்பவர் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலைகிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment