தனது முதலாளியின் நிலத்தில் காவலாளியாக தங்கி இருக்கும் ஒருவர், அந்த நிலம் தனக்குதான் சொந்தம் என்றும், இதை கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்; குறிப்பிட்ட அந்த நிலத்தில் தனது குடும்பம் இரு தலைமுறைகளாக வசித்து வருவதோடு, அதை பாராமரித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கி பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது.நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், '’ஒரு குறிப்பிட்ட நிலத்தில் காவலாளியாக இருப்பவரோ அல்லது அந்த நிலத்தை கவனித்துக்கொள்பவரோ,அல்லது அந்த நிலத்தில் வேலைசெய்பவரோ யாராக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு காலம் அந்த பணியை செய்து கொண்டு இருந்தாலும் அந்த நிலத்துக்கு ஒரு போதும் உரிமை கோர முடியாது. அவர்கள் அந்த நிலத்துக்கு உரிமையானவரின் சார்பில், அந்த நிலத்தை கவனித்துக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.குறிப்பிட்ட அந்த நிலத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே அவர்கள் அந்த நிலத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காவலாளியின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.மேலும் தனது முதலாளியின் நிலத்துக்கு உரிமை கோரிய காவலாளி, வழக்கு செலவாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த தொகையை அவர் 2 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் அந்த இடத்தையும் 2 மாதங்களுக்குள் காலி செய்யவேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.
No comments:
Post a Comment