வரும் 19ந் தேதி முதல் கார் கண்ணாடியில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. தடையை மீறினால் அபராதம் மற்றும் லைசென்ஸ் பறிமுதல் நடவடிக்கைகள் பாயும்.கார்களில் கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிம்களுக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காரை பயன்படுத்தி நடக்கும் சமூக விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் இந்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.வரும் 19ந் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. தடை அமலுக்கு வந்த பின் சன் கன்ட்ரோல் ஃபிலிம் காரில் ஒட்டப்பட்டிருந்தால் முதல்முறை ரூ.100 அபராதமும், இரண்டாவது முறை ரூ.300 அபராதமும் விதிக்கப்படும்.தொடர்ந்து இதுபோன்று ஒட்டப்பட்டிருந்தால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டும் என்று போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. கூடுதலாக ஒட்டப்படும் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பொருந்தும்.கார் வாங்கும்போதே ஒட்டப்பட்டிருக்கும் டின்டட் கண்ணாடிகளுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியிருப்பவர்கள் அதை உடனடியாக நீக்கிவிடுவது நல்லது.
No comments:
Post a Comment