இந்திய பைலட்டுகள் சங்கத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவன பைலட்டுகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 200 ஏர் இந்தியா விமானிகளின் சட்டவிரோத போராட்டத்தை அதன் நிர்வாகம் ஒடுக்க வேண்டும். இல்லையென்றால், உயர்நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த ஸ்டிரைக் சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், இந்த ஸ்டிரைக்கின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டது.முன்னதாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள பைலட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசு தெரிவித்தது.எனினும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று பயணிகளிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்தார்.
ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் ஏர் இந்தியாவுக்கு இந்த வேலைநிறுத்தத்தால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஏர் இந்தியா நிர்வாகம் இன்று காலை 16 பேரையும், மாலை மேலும் 9 பைலட்டுகளையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறுகையில், உயர் நீதிமன்றம் சொல்லியே கேட்காத பைலட்டுகள், நான் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment